Published:Updated:

`மூட்டுவலியிலிருந்து தப்பிப்பது எப்படி?' - வழிகாட்டும் அவள் விகடனின் ஆன்லைன் கருத்தரங்கு

மூட்டு வலி பற்றிய ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
மூட்டு வலி பற்றிய ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து `மூட்டுவலி முதல் விளையாட்டுக் காயங்கள் வரை... ஆரோக்கியம் காப்போம்!' என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

எலும்புத் தேய்மானத்தின் காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே தொந்தரவு கொடுத்த வந்த மூட்டு வலிப் பிரச்னை இப்போதெல்லாம் நடுத்தர வயதினர், இளவயதினருக்கும் ஏற்படுகிறது. வாழ்க்கைமுறை மாற்றம், உணவு, உடல் பருமன், விளையாட்டுக் காயங்கள், தற்போதைய பெருந்தொற்றுக் காலம் என இதற்கான காரணங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. மிக அதிகமான உடல் உழைப்பு, மிகக் குறைந்த உடல் உழைப்பு இருக்கும் எந்த வயதினரும் இந்த மூட்டு வலியைச் சந்திக்க நேரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி
மூட்டு வலி
40+ வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கும் மூட்டுவலி - தீர்வு என்ன? #LifeStartsAt40 #நலம்நாற்பது

மூட்டுவலி பிரச்னை உள்ள அனைவருக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. பிரச்னையுடைய 90% பேருக்கு மருந்து, மாத்திரை, உடற்பயிற்சி, உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்டவை மூலமாக சரிபடுத்தலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மூட்டுவலி தொடர்பான அனைத்து வகையான ஆலோசனைகளையும் வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து `மூட்டுவலி முதல் விளையாட்டுக் காயங்கள் வரை... ஆரோக்கியம் காப்போம்!' என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மூட்டு வலி
மூட்டு வலி

முடக்கியல் மருத்துவரும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூட்டு மற்றும் விளையாட்டுக் காயங்கள் பிரிவின் தலைவருமான யு. டி. வாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூட்டுவலிக்கான காரணங்கள், தீர்வுகள், எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனைகள் வழங்குவார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கும் மருத்துவர் ஆலோசனைகளை அளிப்பார்.

மூட்டு வலி பற்றிய ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
மூட்டு வலி பற்றிய ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
Vikatan

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யவும்.

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#

அடுத்த கட்டுரைக்கு