Published:Updated:

கோவாக்சின் தடுப்பூசி: 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு; முடிவுகள் சொல்வது என்ன?

A doctor prepares to administer Covaxin vaccine
A doctor prepares to administer Covaxin vaccine ( AP Photo/Rafiq Maqbool )

கோவாக்சின் தடுப்பூசிக்கு `அவசர கால பயன்பாடு' என்ற அடிப்படையில் அனுமதியளிப்பது பற்றி ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வின் முடிவில் கோவாக்சின் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 77.8% என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Bharat Biotech
Bharat Biotech
AP Photo/Mahesh Kumar A
கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வெளிநாடு செல்வதில் சிக்கலா? - உண்மை என்ன?

செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கேவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இந்தியாவில் 25 இடங்களில் நடைபெற்றது. புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர் ஆகியவற்றுடன் இணைந்து தடுப்பூசியைத் தயாரித்தன. ஆய்வு முடிவுகள் பற்றி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசித்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``மூன்றாம் கட்ட பரிசோதனை 18 - 98 வயதுக்குட்பட்ட 130 பேரிடம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 12% பேருக்கு பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 0.5% பேருக்கு சற்று தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டன. பிற கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்குத் தீவிர பக்கவிளைவுகள் குறைவாகவே காணப்படுகிறது.

Vials of COVAXIN
Vials of COVAXIN
AP Photo/Anupam Nath

தீவிர அறிகுறிகளுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 93.4% செயல்திறன் கொண்டுள்ளது. தற்போது பரவியுள்ள டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அறிகுறிகளுள்ள தொற்றுக்கு எதிராக 77.8% செயல்திறன் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``கோவாக்சின் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் நடத்தி அதன் பாதுகாப்பும் செயல்திறனும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது இந்தியாவின் திறனை உலகளவில் வெளிப்படுத்தியதோடு, பிற வளரும் நாடுகள் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய உற்பத்தி மேம்பாட்டில் கவனம் செலுத்தவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் இந்தக் கண்டுபிடிப்பானது உலக மக்களைக் காப்பாற்றத் தயாராக உள்ளது என்பது எங்களுக்குப் பெருமை மிகுந்த தருணமாகும்" என்று தெரிவித்துள்ளார் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா.

COVAXIN
COVAXIN
கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வெளிநாடு செல்வதில் சிக்கலா? - உண்மை என்ன?

கோவாக்சின் தடுப்பூசிக்கு `அவசர கால பயன்பாடு' என்ற அடிப்படையில் அனுமதியளிப்பது பற்றி ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா தவிர, பிரேசில், பிலிப்பைன்ஸ், ஈரான், மெக்ஸிகோ உள்ளிட்ட 15 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு