Published:Updated:

இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு... ஸ்வீட் எடு, கொண்டாடு!

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநிலங்களில், கருவுறுதல் விகிதமானது `ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள்' எனக் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் `வாழ்நாள் கருவுறுதல் விகிதம்' குறைவாக உள்ளது.

Child
Child ( pixabay )

10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் ஆண் பெண் விகிதாசாரமும் (Sex Ratio) கணக்கிடப்படுவது வழக்கம். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், இத்தகைய கணக்கெடுப்புகள் மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன.

Child
Child
pixabay

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் `சென்ட்ரல் பியூரோ ஆஃப் ஹெல்த் இன்டெலிஜென்ஸ் (Central Bureau of Health Intelligence - CBHI)' அமைப்பு சமீபத்தில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, ஆண், பெண் குழந்தைகளின் விகிதாசாரம் 1000 : 933 ஆக இருந்தது (1000 ஆண் குழந்தைகளுக்கு 933 பெண் குழந்தைகள் என்ற விகிதம்). இது எடுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட தரவுகள், தற்போது வெளியாகியுள்ளன.

Child
Child
pixabay

அந்த வகையில் 2011-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது பெண் குழந்தைகளின் விகிதாசாரம் 1000 : 943 ஆக அதிகரித்துள்ளது. இதில் கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 949 ஆக உள்ளதாகவும், நகர்ப்புறங்களில் 929 ஆக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே அறிக்கையில், இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் முன்பைக் காட்டிலும் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 முதல் 2016-ம் ஆண்டுக்குள் பிறப்பு விகிதம் 5.4 சதவிகிதமும் இறப்பு விகிதம் 2.1 சதவிகிதமும் குறைந்துள்ளன. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநிலங்களில், கருவுறுதல் விகிதமானது `ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள்' எனக் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் `வாழ்நாள் கருவுறுதல் விகிதம்' குறைவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Child
Child
pixabay

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள சி.பி.ஹெச்.ஐ அமைப்பின் அதிகாரிகள், "இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளனர்.