Published:Updated:

பக்கவாதம் - காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை... விரிவான தகவல்கள் | FAQs

stroke

``பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்."

பக்கவாதம் - காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை... விரிவான தகவல்கள் | FAQs

``பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்."

Published:Updated:
stroke

இன்றைய வாழ்வியல் முறையில் ஐந்தில் ஒருவருக்கு மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எங்கோ, யாருக்கோ என கேள்விப்பட்ட இந்த பாதிப்பு, நம்மைச் சார்ந்த பலருக்கும் ஏற்படுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம். பக்கவாதம் என்றால் என்ன, இந்த பாதிப்புக்கான காரணம், சிகிச்சை முறைகள் குறித்து விரிவான விளக்கங்களைத் தருகிறார், சென்னை, காவேரி மருத்துவமனையின் நரம்பியல்துறை மூத்த மருத்துவரான (Senior Consultant Neurology and Neurophysiology) புவனேஸ்வரி ராஜேந்திரன்.

பக்கவாதம் - காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை... விரிவான தகவல்கள் | FAQs

பக்கவாதம் என்றால் என்ன?

``பக்கவாதம் என்பது மூளையில் ஏற்படும் ஒருவித ரத்த ஓட்ட பாதிப்பு. ரத்தக்குழாயில் ரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டு, மூளையில் ரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படும் பாதிப்பு, இஸ்கிமிக் பக்கவாதம் (Ischemic stroke) எனப்படும். ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்கசிவினால் ஏற்படும் பாதிப்பு, ரத்தக்கசிவு பக்கவாதம் (Hemorrhagic) எனப்படும்.

பக்கவாதத்தின் அறிகுறிகள்?

* பக்கவாதம் ஏற்படும்போது வாய் கோணல் ஆகலாம் அல்லது பேசும்போது குழறல் ஏற்படலாம் அல்லது பேச்சு தடைப்படலாம்.

* ஒருபக்க கை அல்லது காலில் பலம் குறையலாம்.

* நடக்கவே முடியாத அளவுக்குத் தடுமாறி விழுவது.

* பார்வை மங்கலாம்.

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.
டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.

முதலுதவி நேரம் முக்கியமானது!

* பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்த பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

* தகவல் அறிந்து நோயாளியின் வீட்டுக்கு மருத்துவக்குழுவினர் வந்ததும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, சுயநினைவுத்திறன் ஆகியவற்றை முதலில் சரிபார்த்து, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அலுவலருக்கு நோயாளியின் நிலை குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படும். இந்த விவரங்களின்படி, நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் இருப்பார்கள்.

ஆரம்பகட்ட சிகிச்சை முறைகள்...

* நோயாளி மருத்துவமனைக்கு வந்ததும் அவரின் உடல்நிலை செயல்பாடுகள் சரியான முறையில் இருக்கின்றனவா என்பதை மருத்துவர்கள் முதலில் சரிபார்த்துக்கொள்வார்கள். பிறகு, சில அளவுகோலுக்கு ஏற்ப, நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பக்கவாதத்தின் தீவிரத்தன்மை குறித்துக் கண்டறியப்படும்.

* பக்கவாதத்துக்கான சிகிச்சையில் சி.டி.ஸ்கேனர் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது. இந்த சிகிச்சையின்போதுதான், ரத்தக்கசிவால் பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறதா அல்லது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். என்ன வகையான பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள ஸ்கேன் செய்து பார்ப்பதும் அவசியமான நடைமுறையாக இருக்கும்.

பக்கவாதம் - காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை... விரிவான தகவல்கள் | FAQs

* இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்பட்டிருந்தால், அதைக் குணப்படுத்த நோயாளிக்கு அளிக்கப்படும் மருந்துகள் குறித்து அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் கொடுக்கப்படும்.

* பக்கவாதத்துக்கான ஆரம்பகட்ட சிகிச்சை தொடங்கியதும், நியூரோ க்ரிட்டிகல் கேர் யூனிட்டில் நோயாளி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 - 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு இணை பாதிப்புகள் ஏற்படுகின்றனவா, உடல்நிலையில் சிக்கலான மாற்றம் ஏற்படுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்து சிகிச்சை தரப்படும்.

மறுவாழ்வு சிகிச்சை முறைகள்!

பக்கவாதத்துக்கான சிகிச்சையில் மறுவாழ்வு சிகிச்சை (Rehabilitation treatment) முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தச் சிகிச்சையை எவ்வளவு விரைவாக ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நோய் பாதிப்பிலிருந்து குணமாகி, இயல்பு வாழ்க்கைக்கு நோயாளியால் விரைவாகத் திரும்ப முடியும். Psychotherapy மற்றும் Occupational therapy சிகிச்சைகள், பக்கவாத சிகிச்சையில் சிறப்பான பலனைக் கொடுக்கும்.

பக்கவாதம் - காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை... விரிவான தகவல்கள் | FAQs

மருத்துவக்குழுவினர்கள் பலரின் கூட்டு முயற்சியால்தான் பக்கவாதத்துக்கான சிறப்பான சிகிச்சையைக் கொடுத்து, நோயாளியை விரைவாகக் குணப்படுத்த முடியும்" என்கிறார் தெளிவாக.