அண்டம் முழுக்க நிறைந்திருக்கும் பரிபூரண சக்தியே பஞ்சபூதம். பஞ்சபூதமே பேரண்டம், பஞ்சபூதமே நாம். சித்தர்கள், யோகிகள், முனிவர்கள் அனைவரும் நமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்து சூத்திரங்களும் இந்த பஞ்சபூத கொள்கைகளைக்கொண்டே அமையும். மண், நீர், அக்னி, வாயு, விண் ஆகிய ஐந்து சக்திகளாலேயே நம் உடல் இயங்குகிறது.

உருவம், அருவுருவம், அருவம் என இச்சக்திகள் தன்னிலை கொண்டு நம் தேகத்தில் இயங்குகின்றன. இந்தச் சக்திகளின் குறைபாடுகளே நோய் எனும் துன்பத்தைத் தருகின்றன. பஞ்சபூத சக்தியை நம் உடலில் சமன்படுத்தி, நாம் வல்லமையுடன் வாழ நம் சித்தர்கள் பல மார்க்கங்களை நமக்குப் பாடங்களாக்கி வைத்துள்ளனர்.

தானியம், காய்கறி, பழங்கள், கீரைகள் போன்ற மண் சக்திகளை உட்கொள்வதால் நம் தேகத்துக்கு அதிக சத்துகள் கிடைப்பதாக நவீன விஞ்ஞானம் கூறினாலும், மண் சக்தியால் மட்டுமே எல்லா சத்துகளும் கிடைத்துவிடுவதாக கூற முடியாது. விளங்க முடியாத அதீத ஆற்றலை நம் உடல் சூட்சுமமாக ஒளித்துவைத்துள்ளது. ஒளிந்துகிடக்கும் பிராண ஆற்றல் என்ற உயிர் ஆற்றலே நம் உயிர்வாழ தேவைப்படும் மிகப்பெரும் சக்தியாகும்.

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே’ - திருமந்திரம் : 564.

ஆரோக்கியமாய் உயிர் வாழத் தேவையான சூட்சும சக்தி காற்றில் நிரம்ப உள்ளது என்பது பற்றி திருமூலரின் திருமந்திரத்தில் பல குறிப்புகள் உள்ளன. காற்றின் வித்தை யைக் கூறாத சித்தர்களே இல்லை எனலாம்.

முதலைகளும் ஆமைகளும் 300 ஆண்டுகள் தாண்டியும் வாழ்வதற்கு இந்த மூச்சாற்றல்தான் காரணம். மூச்சை அடக்கினால் ஆன்மாவை அடக்கலாம். ஆன்மா அடங்கி னால் சகலமும் நம் வசமாகும் என்பது சித்தர்கள் வாழ்வு கூறும் உண்மை. மூச்சுதான் நம் ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தி.

காற்றிலுள்ள பிராணனைப் (உயிர் சக்தியை) பிரித்து உடலுக்குச் சக்தியூட்டும் பல பயிற்சிகளை நம் முன்னோர் கலைவடிவமாக நமக்கு அருளியுள்ளார்கள்.

அவ்வகைக் தேகப் பயிற்சிக் கலைகளில் ஓன்றுதான் மூச்சுப் பயிற்சி. தேகத்தில் எங்கு உயிர் சக்தி குறைகிறதோ அங்கு நோய் தோன்றும். தடங்கலற்ற உயிர் சக்தி உடலை செம்மைப்படுத்தும்.இதற்கு 10 விதமான மூச்சுப் பயிற்சிகள் பிரதானம்.

இந்தப் பயிற்சிகள் முருகப் பெருமான், நந்தியம்பெருமான் மற்றும் அகத்தியர் வழி வந்த பயிற்சி முறைகளாகும். களரி மற்றும் வர்மக்கலை பயிலும் மாணாக்கர் களுக்கு இந்த மூச்சுப் பயிற்சி பிரதான பாடம். யோகா போன்ற பாடத்தின் பிறப்பிடம் இதுவேயாகும்.

மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து அடுத்த நிலை பயிற்சி களும் உண்டு. முதலில் மூச்சுப் பயிற்சி அடுத்து மெய்யடக் கப் பயிற்சி. இதன் மூலம் நம் உடலின் தசை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தி உடல் ஆரோக்கியம் மற்றும் மன வலிமையை அதிகரிக்கலாம். மூன்றாவது பிராண சக்தி யோகா பயிற்சி. இதனால் தேகத்தை தெய்விகமாக்கி பஞ்ச பூத சக்திகளோடு இணைந்து நோய்களை வெல்ல இயலும்.

நாம் முதற்கட்டமாக மூச்சுப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்வோம். மூச்சுப் பயிற்சி களில் இரண்டு உங்களுக்காக.

காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்து, வசதியாக சம்மணம் இட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு வளையாமல் நன்கு நிமிர்ந்து அமர்ந்துகொள்ளுங்கள்.

இப்போது வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பு போல் வயிற்றை அழுத்தி மூச்சை வெளியேற்ற வேண்டும். இப்படி 20 முறை செய்ய வேண்டும். இதன் மூலம் சுவாசப் பாதை சுத்தமாகும்.

நன்கு நிமிர்ந்து அமர்ந்த நிலையில் வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடிக்கொள்ள வேண்டும்.

பின்னர் இடது நாசி வழியாக (மூன்று வரை எண்ணியவாறு) மெள்ள மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அடுத்து இரு நாசிகளையும் முடிக் கொண்டு முன்றிலிருந்து நான்கு வரை எண்ண வேண்டும். இப்போது மூச்சுக் காற்றை உள்ளே இருத்தி வைத்திருப்போம்.

அடுத்ததாக, வலக்கை மோதிர விரலால் இடது நாசியை மட்டும் மூடிக்கொண்டு, வலது நாசி வழியாக மூன்றிலிருந்து நான்கு வரை எண்ணியபடியே மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும்.

பிறகு அதே போல வலது நாசி வழியாக மூச்சை இழுத்து, இரண்டு நாசிகளையும் மூடி மூச்சை உள் நிறுத்தி, இடது நாசி வழியே வெளியேற்ற வேண்டும். இப்படி 10 சுற்றுக்கள் செய்ய வேண்டும். இதனால் நாடிகள் சுத்தமாகும். ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயங்கும். இதுபோன்று மேலும் 8 மூச்சுப் பயிற்சிகள் உண்டு. அனைத்தும் ஆதிப் பயிற்சி வடிவங்கள்.

அற்புதமான இந்த 10 வகை மூச்சுப் பயிற்சிகளை நம் வாசகர்களும் அறிந்து பின்பற்றி பயனடையும் விதம், ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது, சக்தி விகடன் (முன்பதிவு விவர அறிவிப்பு எதிர் பக்கத்தில்) .

வரும் 5.7.2020 ஞாயிறன்று சக்தி விகடனும் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையமும் இணைந்து வழங்கும் இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.

தேகம் பொலிவு பெற, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஆற்றல் பெருக இந்தப் பயிற்சிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

கபாலபாதி மூச்சுப்பயிற்சி: சுவாசப் பாதையைச் சுத்தம் செய்து அங்குள்ள நுண்கிருமிகளை அழிக்கும்.

நாடி சுத்தி மூச்சுப்பயிற்சி:  நாடிகள் சுத்தமாகி உடலின் ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயக்கப்படுகிறது.

நாடி சுத்தி மூச்சுப்பயிற்சி இரண்டாம் சுற்று முறை: இதனால் அனைத்து உள்ளுறுப்புகளும் நன்கு இயங்கி கெட்டக் கொழுப்புகள் கரைந்து போகின்றன. இதனால் அதிக உடல் எடை குறையும்.

நாடி சுத்தி மூச்சுப்பயிற்சி மூன்றாம் சுற்று முறை: நரம்பு மண்டலங் கள் வலுவாகி உடல் உறுதியாகும்.

பஸ்திரிகா மூச்சுப்பயிற்சி: ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும், தொண்டை சம்பந்தப்பட்ட தொற்றுகளை நீக்கவும் பயன்படும்.

உஜ்ஜயி மூச்சுப்பயிற்சி: உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் பயிற்சி இது. சோம்பல் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்.

ஆசிபா மூச்சுப்பயிற்சி: சிறுநீர், பாலியல் உறுப்புகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். முதுமைக்கால நீர்க்கசிவு நீங்கும்.

சீத்தளி மூச்சுப்பயிற்சி: ஒற்றை தலைவலி, அல்சர், மன அழுத்தம், மூலம் போன்றவை நீங்கும்.

சீத்காரி மூச்சுப்பயிற்சி: உடல் வெப்பத்தைத் தணிக்கும். வெம்மை உடல் குளிர்ச்சியாகி உடல் எடை கூடும். வெப்பு நோய்கள் விலகும்.

சதந்த மூச்சுப்பயிற்சி: பற்கள், எலும்புகள் உறுதியாகும். தேக வலிமை பொங்கும்.