Published:Updated:

பேருந்துப் பயணங்கள், உணவக மேசைகள்... கொரோனாவோடு வாழ மருத்துவர் அறிவுரைகள்! #LiveWithCoronaGuide

ஹோட்டல்
ஹோட்டல்

பயணம் முழுக்கக் கைகளைக் குறுக்காகக் கட்டியபடியே பயணிக்கவும். இது, மூக்கு, வாயை அனிச்சையாகக் கைகள் தொடுவதிலிருந்து தவிர்க்கச் செய்யும்.

'கொரோனாவோடு வாழப் பழகுவோம்' வாழ்க்கைமுறை கிட்டத்தட்ட நடைமுறைக்கு வந்துவிட்டது. பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு, உணவகங்கள் திறக்கப்பட்டு வருகிற இந்தச் சூழ்நிலையில், பொதுப் பயணம், வெளி உணவுகள் விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துகிறார், பொது மருத்துவர் சுந்தர் ராமன்.

corona
corona

பயணத்தில்...

* வேலை மற்றும் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லவும். வீட்டைவிட்டு ஒருமுறை வெளியேறிவிட்டால் செய்துமுடிக்க வேண்டிய அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் வீடுதிரும்ப வேண்டும். வந்ததும் வெந்நீரில் குளித்துவிட்டு, மாஸ்க் முதல் ஆடைகள்வரை முறையாக அப்புறப்படுத்தவும்.

* வெளியே செல்லும்போது மாஸ்க், கையுறை கட்டாயம். கைப்பையில் சானிட்டைஸர், ஹேண்ட் வாஷ் எப்போதும் இருக்க வேண்டும். பொதுவெளியில் கைகளை அதிகம் பயன்படுத்தியதாக உணர்ந்தால், ஹேண்ட் வாஷ் கொண்டு கைகழுவிய பின்னர், சானிட்டைஸர் பயன்படுத்தவும். கைகழுவ வாய்ப்பில்லாத சூழலில், நேரடியாக சானிட்டைஸர் பயன்படுத்தலாம்.

Hand sanitizer
Hand sanitizer

* சானிட்டைஸரில் இருக்கும் ஆல்கஹால் காரணமாக அது தீப்பற்றும் தன்மையுள்ளது என்பதால், அதை மனதில் வைத்து சூழலுக்கேற்பப் பயன்படுத்தவும்.

* பையில் வாட்டர் பாட்டில் எடுத்துக்கொள்ளவும். வீட்டிலிருந்து கிளம்பும்போதே தேவையான அளவு தண்ணீர் அருந்திக்கொள்ளவும். முடிந்தவரை பயணத்தின் நடுவில் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கவும். வெளியிடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலி! - கலக்கத்தில் மக்கள்

* பயணத்தின் நடுவில் தவிர்க்க முடியாத அளவுக்குத் தாகமெடுத்தால் கூட்டம், புழுதி ஏதுமற்ற இடத்தில் ஒதுங்கி, பையிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் அருந்தவும். ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் எடுத்துக்கொள்வது நலம். மாஸ்க்கின் நடுப்பகுதியில் விரல் படாமல் மாஸ்க்கைக் கீழே இறக்கிவிட்டு, வெந்நீரால் வாய் கொப்பளித்துவிட்டுத் தண்ணீர் அருந்தலாம்.

பொது மருத்துவர் சுந்தர் ராமன்.
பொது மருத்துவர் சுந்தர் ராமன்.

* பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும், அங்கு அறிவுறுத்தப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பேருந்தில் இரண்டு இருக்கைக்கு ஓர் ஆள். இடவசதியைப் பொறுத்து நான்கைந்து பேர் நிற்கலாம்... அவ்வளவுதான். சப்போர்ட்டுக்குக் கம்பிகளைப் பிடிப்பவர்கள் இறங்கியதும் கைகழுவிவிடவும்.

* பயணம் முழுக்கக் கைகளைக் குறுக்காகக் கட்டியபடியே பயணிக்கவும். இது, மூக்கு, வாயை அனிச்சையாகக் கைகள் தொடுவதிலிருந்து தவிர்க்கச் செய்யும்.

* வீடு, அலுவலகம், கடை என ஒவ்வொரு முறை சேரிடம் அடைந்த பின்னரும் கைகழுவவும்.

Bus
Bus

* பயணத்தில் உடன் பயணிப்பவர்களிடம் பேசிக்கொண்டே வருவதைத் தவிர்க்கவும். பேசும்போது பிறர் வாயிலிருந்து வெளிப்படும் நீர்த் திவலைகள் பேருந்துக் காற்றில் மிதந்து வரலாம். அதேபோல, பை உள்ளிட்ட உடைமைகளை மற்றவர்களிடம் கொடுத்துவைப்பது, அவர்களை எடுத்துக்கொடுக்கச் சொல்வது, டிக்கெட் எடுக்க பணத்தை, டிக்கெட்டை பாஸ் செய்து வாங்குவது என எந்தத் தொடர்பையும் தவிர்க்கவும்.

`கொள்ளையனுக்கு தெரிந்த ஏடிஎம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு' -கிருமிநாசினி தெளிக்க வந்தவரால் அதிர்ச்சி #Chennai

உணவகத்தில்...

* சுகாதாரமான, இடவசதியுள்ள உணவகத்தைத் தேர்ந்தெடுக்கவும். வாய்ப்பில்லாதபோது பார்சல் வாங்கிச் செல்லலாம்.

* ஒரு டேபிளில் எதிரெதிரே இருவர் மட்டுமே அமர வேண்டும்.

* சர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதையும் சமூக இடைவெளியுடன் உணவு பரிமாறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

hotel
hotel

* சாப்பிடும் முன், பின் கையோடு நாம் வைத்திருக்கும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்தியே கைகழுவவும். கைகழுவும் இடத்தில் தனி மனித இடைவெளி கட்டாயம். ஏசி அறையைத் தவிர்க்கவும். சூடாகப் பரிமாறப்படும் உணவுகளே சிறந்தவை. குளிரூட்டிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வாழ்வாதாரத்துக்குத்தான் இந்தத் தளர்வுகள். உயிராதாரம் நம் பொறுப்பு.

அடுத்த கட்டுரைக்கு