Published:Updated:

Covid Questions: கொரோனா பாதித்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்ப்பிணி
கர்ப்பிணி ( மாதிரி புகைப்படம் )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

Covid Questions: கொரோனா பாதித்த பெண், தன் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டலாமா?

- சங்கீதா

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர்நல சிறப்பு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கொரோனா பாதித்த பெண் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதற்கு முன் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். டபுள் மாஸ்க் எனப்படும் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் குழந்தையிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தாய் ரொம்பவே பயந்தாலோ, கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலோ மட்டும் தாய்ப்பால் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பவுடர் உணவுகள் கொடுக்கலாம். செயற்கை உணவுகள் கொடுக்கும்போது குழந்தைக்கு கோவிட் தவிர்த்த வேறு தொற்றுகள் வர வாய்ப்புகள் அதிகம். அதனால் கொரோனா வந்த நிலையிலும் தாய்ப்பால் கொடுப்பதே குழந்தைக்கு நல்லது. மிதமான தொற்றுள்ளவர்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது மட்டும் குழந்தையைத் தூக்கலாம்.

மற்ற நேரத்தில் கொரோனா தொற்றில்லாத வேறு யாரிடமாவது கொடுத்துவிட வேண்டும். மார்பகங்களை நன்கு சுத்தப்படுத்திவிட்டுத் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒருவேளை அந்தத் தாய் பலவீனமாக உணர்ந்தால் தாய்ப்பாலைச் சேகரித்துவைத்தும் கொடுக்கலாம். கொரோனாவுக்குப் பிறகு தாய்க்கு உருவாகும் ஆன்டிபாடிக்கள் ஒரு மாதம் கழித்துதான் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கும் போகும். ஆனால் அது தவிர்த்த மற்ற ஆன்டிபாடிக்கள் குழந்தைக்குப் போகும். கோவிட் பாசிட்டிவ் ஆகும் எல்லா கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளும் கோவிட் பாசிட்டிவ்வாக பிறப்பதில்லை. அப்படிப் பிறக்கும் குழந்தைகள் மிக மிக அரிது.

கர்ப்பிணி -representational Image
கர்ப்பிணி -representational Image

பிரசவமாகும்போது ஒரு பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனால், டெலிவரி ஆன இரண்டாவது நாள்தான் குழந்தைக்கு டெஸ்ட் எடுப்போம். பிரசவத்தன்றுதான் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவியிருக்கிறதா என்பது தெரிய 5 முதல் 7 நாள்கள் ஆகும். எனவே குழந்தைக்கு இருமுறை கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் அறிகுறிகளற்றே இருப்பார்கள். ஆனால் அவர்கள் கேரியர்களாக இருந்து மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்ப வாய்ப்புண்டு. கர்ப்பத்தில் இருக்கும்போதே குழந்தைக்கு கொரோனா பாதிப்பது மிக மிக அரிது. பிரசவ நேரத்தில்தான் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியே பாதிக்கப்பட்டாலும் குழந்தைகளுக்கு அது பெரிய பிரச்னைகளைக் கொடுப்பதில்லை. ஆனால் கேரியர்களாக இருப்பதால் குழந்தைகள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். வீட்டில் வயதான தாத்தா, பாட்டி இருந்தால் அவர்களும் பாதிக்கப்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு இதய அடைப்பு மற்றும் சர்க்கரைநோய் உள்ளது மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்த நிலையில் நான் தடுப்பூசி போடலாமா?

- (நேசமணி நான்சி, விகடன் இணையத்தில்)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இதய அடைப்பு என்பது இதய தமனிகளின் அடைப்பு என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் பதிலளிக்கிறேன். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு தமனிகளில் ரத்தம் உறையாமலிருப்பதற்கான மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். அதே போல நீரிழிவு உள்ளவர்களும் அதற்கான மாத்திரைகள் அல்லது இன்சுலின் எடுப்பார்கள். இவர்கள் இருவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதய நோயாளிகள் அவர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை ஊசி போடுவதற்கு முன்போ, போட்ட பிறகோ நிறுத்தக்கூடாது. நீரிழிவாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு