Published:Updated:

12 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுமா... கர்நாடக சிறுவனுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவர் விளக்கம்!

மாரடைப்பு
News
மாரடைப்பு

மிக இளம் வயதில் ஏற்படக்கூடிய இதுபோன்ற மரணங்களை நாம் மாரடைப்புக்குள் மட்டுமே வைத்துவிட முடியாது. இதயத் துடிப்புகளில் (cardiac rhythm) ஏற்படக்கூடிய பிரச்னையாக இருக்கலாம். இது பெரும்பாலும் கண்டறிப்படாமலே இருந்திருக்கலாம்

12 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுமா... கர்நாடக சிறுவனுக்கு நேர்ந்தது என்ன? மருத்துவர் விளக்கம்!

மிக இளம் வயதில் ஏற்படக்கூடிய இதுபோன்ற மரணங்களை நாம் மாரடைப்புக்குள் மட்டுமே வைத்துவிட முடியாது. இதயத் துடிப்புகளில் (cardiac rhythm) ஏற்படக்கூடிய பிரச்னையாக இருக்கலாம். இது பெரும்பாலும் கண்டறிப்படாமலே இருந்திருக்கலாம்

Published:Updated:
மாரடைப்பு
News
மாரடைப்பு

கர்நாடக மாநிலத்தில், நெஞ்சு வலிப்பதாகக் கூறிய 12 வயது ஆறாம் வகுப்பு சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்துள்ள செய்தி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மடிகேரி மாவட்டத்தில் உள்ள குடமங்களூரில் வசித்து வருபவர் மஞ்சச்சரி. இவர், அருகேயுள்ள பள்ளியில் வாகன ஓட்டுநராக உள்ளார். அவரின் 12 வயது மகன் கீர்த்தன் அதே பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்து வந்துள்ளான். கடந்த சனிக்கிழமை மாலை, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளான் கீர்த்தன்.

treatment
treatment

சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகக் கூறிய கீர்த்தனை, குடும்பத்தினர் உடனடியாக குஷால்நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயம் தொடர்பான பிரச்னையால் சிறுவன் இறந்ததை அறிந்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்; திடீர் மரணத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் கதறியழுதனர். சிறுவன் கீர்த்தனின் எதிர்பாராத மரணம், அந்தக் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.

சிறுவயதிலேயே குழந்தை உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து, தனது முகநூலில் விரிவாகப் பதிவிட்டிருந்தார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவரிடம் பேசினோம். ``மிகச் சிறு வயதில் மரணத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இதயம் தொடர்பான பிரச்னையை மாரடைப்புக்குள் கொண்டு வருதல் கூடாது. முதலில் மாரடைப்புக்கும் இதய முடக்கம் அல்லது செயலிழப்பு ஆகியவற்றுக்கான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு என்பது 30 வயதைக் கடந்தவர்களுக்கு, தற்போது 20 வயதைக் கடந்தவர்களுக்குக்கூட வருகிறது.

டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்
டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்

மாரடைப்புக்கு இளம்வயது நீரிழிவு, ரத்த அழுத்த நோய், தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றம், அதீத பருமன் எனப் பல காரணங்கள் உண்டு. என்றாலும், மிக இளம் வயதில் ஏற்படக்கூடிய இதுபோன்ற மரணங்களை நாம் மாரடைப்புக்குள் மட்டுமே வைத்துவிட முடியாது. இதயத் துடிப்புகளில் (cardiac rhythm) ஏற்படக்கூடிய இதய முடக்கம்/செயலிழப்பு பிரச்னையாக இது இருக்கும். இது பெரும்பாலும் கண்டறிப்படாமலேயே இருந்திருக்கலாம், அல்லது சில நேரம் தோன்றி உடனே மறைந்திருக்கலாம்.

இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள காரணங்களாக குடும்பத்தில் இதற்கு முன்னதாக யாரேனும் சிறுவயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருந்திருப்பது போன்ற மரபு, சிறுவயதிலேயே இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பது, இதயத்துடிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை கூறலாம். இதன் அறிகுறிகளாக உடற்பயிற்சி செய்யும்போது மயங்கி விழுவது, ஓடி விளையாடும்போது அதிகப்படியான மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுவது, தலைசுற்றி கீழே விழுவது, மார்புப் பகுதியில் ஏற்படும் பலத்த காயத்தின் (BLUNT CHEST INJURY) பின்விளைவுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மாரடைப்பு
மாரடைப்பு

இதுபோன்ற இதயப் பிரச்னைகள் மிகச் சிறு வயதில் (3 - 7) தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலும் நன்றாக ஓடி விளையாடும் வயதிற்கு வந்த பின்னர்தான் இந்த அறிகுறிகள் தெரியும். ஆஸ்துமா, மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே, மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். பரிசோதனை செய்து தொடர்ந்து மருந்துகள் எடுப்பதன் மூலம் தீவிரத்தைக் குறைக்கலாம்” என்றார்.