Published:Updated:

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்?

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு எவ்வளவு காலம் மீண்டும் தொற்று ஏற்படாது?

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தாலும், நோயிலிருந்து மீண்டு குணமானவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுவருவதை மறுக்க முடியாது. கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு எத்தனை நாள்களுக்கு எதிர்ப்பு சக்தி நீடிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒரு மனிதருக்கு வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவரது உடலில் உள்ள எதிர்ப்புசக்தி தூண்டப்பட்டு, அந்த வைரஸை எதிர்க்க உடலில் எதிர்ப்புரதம் (Antibodies) உருவாகிறது. அதன் மூலம் அவரால் அந்த வைரஸ் தொற்றிலிருந்து மீள முடிகிறது.

`கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால்..!’ - மத்திய அரசின் `ஆரோக்கிய சேது' செயலி

சில நேரங்களில் நம் உடம்பில் உருவாகும் எதிர்ப்புரதம், முன்பு தாக்கிய வைரஸை நினைவில் வைத்துக்கொள்கிறது. அப்புரதம் அடுத்தமுறை அந்தத் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். ஒருசில வைரஸ்களில் இந்த எதிர்ப்புரதம் தன்னை தாக்கிய வைரஸை நினைவில் வைத்துக்கொள்ளாது போகலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட 4 சாதாரண கொரோனா வைரஸ் வகைகளுக்கும் அதுதான் நடந்தது. அதனால்தான், அவற்றுக்கு எதிராக நம் உடம்பில் நீடித்த எதிர்ப்புசக்தி இல்லாமல் இருக்கிறது. சளி மற்றும் இருமல் தொற்றும் அடிக்கடி ஏற்படுகின்றது.

தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்

தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக உருவான எதிர்ப்புரதங்கள் (antibodies) எவ்வளவு காலம், மறு தொற்று வராமல் பாதுகாக்கும் என்பதற்குத் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்தப் புதிய கொரோனா வைரஸால் ஒருமுறை தொற்று ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு இருக்குமா என்று கூற முடியாது .ஆனால், ஒரு வருடத்துக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆய்வறிக்கை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

''கோவிட்19 நோய்க்காரணியான கொரோனா, உலகளவில் ஒரு புது வைரஸ். இந்த வைரஸைப் பற்றியும் அதன் எதிர்ப்புத் தன்மை பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதைப் பற்றி அறுதியிட்டுக் கூற இயலாது'' என்கிறார் தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூர்.

அடுத்த கட்டுரைக்கு