Published:Updated:

Doctor Vikatan: தொற்றிலிருந்து குணமானவர், தொற்றுக்குள்ளான வரை பார்த்துக்கொள்ளலாமா?

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தொற்றிலிருந்து குணமானவர், தொற்றுக்குள்ளான வரை பார்த்துக்கொள்ளலாமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

கோவிட் பாதிப்புக்கு உள்ளான ஒருவர் எத்தனை மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்? தொற்றிலிருந்து குணமாகி 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒருவர், பாதிக்கப்பட்ட மற்றொரு நபரை கவனித்துக்கொள்ளலாமா?

- ராஜலட்சுமி (விகடன் இணையத்திலிருந்து)

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு அதையடுத்து ஏற்படும் எதிர்ப்புசக்தி, எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதற்கான சரியான தரவுகள் இன்னும் நம்மிடம் இல்லை. தொற்று பாதித்ததால் ஏற்படக்கூடிய இயற்கையான எதிர்ப்பாற்றலானது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம்வரை உடலில் இருக்கலாம், மீண்டும் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் எதிர்ப்பாற்றலானது 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள்வரை நீடித்து, பிறகு மெள்ள மெள்ள குறையத் தொடங்கும். உருமாற்றமடையாமல் முதலில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக, உடலில் ஏற்பட்ட இயற்கையான எதிர்ப்பு சக்தியும் சரி, தடுப்பூசிகளால் ஏற்பட்ட எதிர்ப்பு சக்தியும் சரி, உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்றுப் பரவலிலிருந்தும் பாதுகாப்பு அளிக்காது என்றுதான் சமீபத்திய ஆய்வுகள் நமக்குச் சொல்கின்றன.

எனவே, ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு, குணமான காரணத்தாலேயே அவர் எந்த பயமும் பாதுகாப்பும் இல்லாமல், தொற்றுக்குள்ளான மற்றவர்களை அணுகலாம் என்று அர்த்தப் படுத்திக்கொள்ளக் கூடாது.

அது சரியானதும் அல்ல. கோவிட் தொற்று ஏற்பட்டு 6 மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தி இருக்கலாம். அதன் பிறகு, குறையத் தொடங்கும். தொற்றுக்குள்ளாகி மீண்டிருந்தாலும், தொற்றே ஏற்படாதவராக இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், போட்டுக்கொள்ளாவிட்டாலும், தொற்றுக்குள்ளானவர்களைக் கவனித்துக்கொள்வதில் எல்லோரையும் போலவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, வீட்டைச் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்வது, போதிய இடைவெளி விட்டு அந்த நபரை அணுகுவது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?