Published:Updated:

`அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் மூலம் கொரோனா பரவுமா?' - உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன?

கொரோனா
News
கொரோனா

கடந்த ஒன்பது நாள்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பத்தாவது நாளான ஞாயிறு மட்டும் 1,36 ,000 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள், அறிகுறிகள் உள்ளவர்களைவிட அறிகுறிகள் இல்லாதவர்களே அதிக சதவிகிதம் உள்ள நிலையில், அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலம் தொற்று அதிகம் பரவும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வந்துள்ள தகவல் அதைத் தெளிவுபடுத்தும் வகையில் உள்ளது.

கொரோனா
கொரோனா

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், `கொரோனா வைரஸ் தாக்குதல் உலக அளவில் வலுவடைந்துகொண்டுவருகிறது. கடந்த ஒன்பது நாள்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பத்தாவது நாளான ஞாயிறு மட்டும் 1,36 ,000 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட தொற்றில் இதுவே அதிக எண்ணிக்கை. ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை கூடியவண்ணம் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஞாயிறன்று பதிவான தொற்றுகளில் 75 சதவிகிதம், அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள 10 நாடுகளிலிருந்துதான் அதிகம் பரவியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் தொற்றிலிருந்து மீள்வதில் நல்ல முன்னேற்றமும் காணப்படுகின்றது. அந்நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தன்னிறைவே ஆபத்தாகலாம்" என்றும் கூறியுள்ளார்.

மரியா வான்
மரியா வான்

அறிகுறிகளற்ற கொரோனா தொற்று உள்ளவர்கள் மூலம் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது அரிது என்று, உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட்19 வைரஸ் தொற்று குழுவைச் சேர்ந்த மரியா வான் கெர்கோவே (Maria Van Kerkhove ), ``உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதாகக் கூறுகின்றனர் . அதுகுறித்து மேலும் ஆராய்ந்து பார்த்ததில், தொற்று உள்ளவர்களுக்கு குறைந்த அளவில் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள், அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலம் தொற்று பரவுகிறது என்று கூறினாலும், உலக சுகாதார நிறுவனம் இதை தொற்று பரவுவதற்கான முக்கியக் காரணமாகக் கருதவில்லை. அறிகுறி அற்றவர்களால், மற்றவர்களுக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே தொற்று பரவும். அறிகுறிகளற்ற தொற்றுள்ளவர்களை, நீண்ட நாள் கண்காணிக்கும்போது, அவர்கள் மூலம் தொற்று பரவுவது மிகக் குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது. இது குறித்து உலக நாடுகளுக்கு பதிலளிக்க மேலும் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.