Published:Updated:

ட்ரம்ப் `கேம்-சேஞ்சர்' என்று குறிப்பிட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உண்மையில் எந்த நோய்க்கான மருந்து? - ஓர் அலசல்

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்
News
ஹைட்ராக்சிக்ளோரோகுயின்

ஒரு நீரிழிவு நோயாளி, ஹைட்ராக்சிக்ளோரோகுயினை எடுத்துக்கொள்ளும்போது, இந்த மருந்து அவரின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதயத்தின் செயல்பாடுகள் மற்றும் இதயத்துடிப்பின் சீரான அளவு இதனால் பாதிக்கப்படலாம்.

'கோவிட்-19' கொரோனா வைரஸ்... ஒட்டுமொத்த உலகின் ஒற்றைப் பிரச்னையாக இருந்துவரும் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்துகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தீர்வு தேடி அலைந்த நமக்கு கண்ணில்பட்டது, மலேரியாவிற்குத் தரப்படும் மருந்தான 'ஹைட்ராக்சிக்ளோரோகுயின்'.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்
ஹைட்ராக்சிக்ளோரோகுயின்

கொரோனா தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் முதல் பொதுமக்கள்வரை பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், இந்தியாவில் இதற்கான தட்டுப்பாடு அதிகரித்தது. எனவே, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயினை ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த மார்ச்-25 அன்று மத்திய அரசு அறிவித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கிடையில், `ஹைட்ராக்சிக்ளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்தாது', `இந்த மருந்தை எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது' என்று பலவித சர்ச்சைக் கருத்துகள் நிலவிக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்கப் அதிபர் டொனால்டு ட்ரம்ப் "கொரோனாவிற்கு எதிரான போரில் 'ஹைட்ராக்சிக்ளோரோகுயின்' ஒரு கேம்-சேஞ்சர்" என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல்...

டொனால்டு ட்ரம்ப்-மோடி
டொனால்டு ட்ரம்ப்-மோடி

"இந்தியா தங்கள் தடைகளைத் தளர்த்தி அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயினை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா மருந்துப் பொருள்கள் அனுப்பி உதவவில்லை என்றால், ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால்... ஒரு பதிலடி இருக்கலாம்” என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொண்ட பிறகு இந்தியாவும் அதைக் கொடுப்பதற்குச் சம்மதித்துள்ளது. இதனால் இந்த மருந்தின் மீதான அனைவரின் கவனமும் அதிகரித்துள்ளது.

"ஹைட்ராக்சிக்ளோரோகுயினை கொரோனாவிற்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்" என்று மருத்துவ ஆய்வின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வருகின்றவரையில் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.
மருத்துவர் அருண் கண்ணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் `ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' (Rheumatoid arthritis) எனப்படும் முடக்குவாத பிரச்னைக்கான மருந்தாகும். எனவே, தங்கள் முடக்குவாதப் பிரச்னைக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் எடுத்துவரும் மக்கள், தற்போது இந்த மருந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் தவித்துவருகின்றனர்.

முடக்குவாத பிரச்னை
முடக்குவாத பிரச்னை

முடக்குவாத பிரச்னைக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் எந்த விதத்தில் பயன்படுகிறது... இந்த மருந்து கொரோனாவிற்குத் தீர்வாகுமா... என்பதைப் பற்றி எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவர் அருண் கண்ணனிடம் பேசினோம்.

"மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள்தான் க்ளோரோகுயின் (Chloroquine) மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் (Hydroxychloroquine). இவற்றில் ஹைட்ராக்சிக்ளோரோகுயின், 'ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' எனப்படும் முடக்குவாத பிரச்னைக்கு மருந்தாகத் தரப்படுகிறது. ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் என்பது ஒருவகை ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் (Autoimmune Disorder).

மருத்துவர் அருண் கண்ணன்
மருத்துவர் அருண் கண்ணன்

அதாவது, ஒருவரின் சுய நோய் எதிர்ப்பு மண்டலம், அவருக்கு எதிராகவே செயல்பட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் எனப்படும். ஹைட்ராக்சிக்ளோரோகுயின் இம்யூன் மாடுலேட்டராக (Immune modulator), அதாவது, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்து அதை மாற்றியமைப்பதால், இது முடக்குவாதப் பிரச்னைக்கு சிறந்த தீர்வாக இருந்துவருகிறது.

இதுமட்டுமல்லாமல், லூபஸ் (lupus - 'லூபஸ்' உடல் உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர். மூட்டுகள், தோல், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு சிவந்துபோவது இதன் அறிகுறிகளாகும்) போன்ற வேறு சில ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னைகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

லூபஸ்
லூபஸ்

தற்போது, பெரும்பாலானோர் கோவிட்-19 தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள, ஹைட்ராக்சிக்ளோரோகுயினைத் தடுப்பு மருந்தாக எடுத்துக்கொண்டு வருகின்றனர். எனவே, இதனால் ஏற்பட்டுள்ள ஹைட்ராக்சிக்ளோரோகுயின் பற்றாக்குறையால், அதை ரெகுலராக எடுத்துவரும் முடக்குவாத பிரச்னை உள்ளவர்கள், மருந்து கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.

கோவிட்-19, கொரோனா வைரஸை ஹைட்ராக்சிக்ளோரோகுயின் குணப்படுத்துகிறது என்று இதுவரை எந்த ஆய்வின் முடிவும் சொல்லவில்லை. மேலும், இதைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மாரடைப்பு
மாரடைப்பு

எனவே, 'ஹைட்ராக்சிக்ளோரோகுயினை கொரோனாவிற்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்' என்று மருத்துவ ஆய்வின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வருகின்றவரையில் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. மேலும், எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு அவசியம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்" என்றார் அருண் கண்ணன்.

எந்தவொரு நோய் பாதிப்பும் இல்லாதவர்கள், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து எலும்பு மருத்துவர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது,

"ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், தடுப்பு மருந்து என்ற பெயரில் ஹைட்ராக்சிக்ளோரோகுயினை எடுத்துக்கொள்ளும்போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் கண்களில் பாதிப்பு ஏற்படலாம்.

மருத்துவர் ராதாகிருஷ்ணன்
மருத்துவர் ராதாகிருஷ்ணன்

ஒரு நீரிழிவு நோயாளி இதை எடுத்துக்கொள்ளும்போது, இந்த மருந்து அவரின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதயத்தின் செயல்பாடுகள் மற்றும் இதயத்துடிப்பின் சீரான அளவு இதனால் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை எடுத்துக்கொள்பவர்கள், ஏற்கெனவே வேறு ஏதாவது உடல்நலப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைய வாய்ப்பிருக்கிறது. எனவே, மக்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்" என்றார்.