Published:Updated:

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என் வயது 45. இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மேமோகிராம் சோதனை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறேன். தடுப்பூசி போடுவதற்கும் மேமோகிராம் டெஸ்ட்டுக்கும் தொடர்புண்டு என்றும், இரண்டுக்கும் இடைவெளி விட வேண்டும் என்றும் சொல்கிறார்களே... அது உண்மையா?

- திவ்யா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ளும்போது மார்பகப் பகுதியில் உள்ள நிணநீர் கணுக்களில் (Lymph nodes) சில நேரங்களில் ஃபால்ஸ் பாசிட்டிவ் எனக் காட்ட வாய்ப்பிருக்கிறது, டெஸ்ட் ரிப்போர்ட் அப்படி வரும்போது அதை பாசிட்டிவ் என்று எடுத்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் டெஸ்ட்டுக்கு வரச் சொல்வோம்.

அவரை தொடர் கண்காணிப்பில் இருக்கச் சொல்வோம். தடுப்பூசியால் ஏற்பட்ட எதிர்ப்பு சக்தியால் மேமோகிராம் சோதனையில் நிணநீர் கணுக்கள் பெரிதாகத் தெரியக்கூடும். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட உடன் மேமோகிராம் செய்யும்போது இப்படி அசாதாரண ரிப்போர்ட் வருவதைத் தவிர்க்கவே கோவிட் தடுப்பூசிக்கும் மேமோகிராம் டெஸ்ட்டுக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி விடுமாறு அறிவுறுத்துகிறோம்.

Mammography (Representatinal Image)
Mammography (Representatinal Image)
Image by Elías Alarcón from Pixabay
Covid Questions: கோவிட் இழப்புகளால் பதற்றத்துக்கும் பயத்துக்கும் உள்ளாகும் குழந்தைகள்; தீர்வு உண்டா?

அதாவது, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொள்வதற்கு முன்போ, இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 4 - 6 வாரங்கள் கழித்தோ மேமோகிராம் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்... நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கமும், கொத்துக்கொத்தான மரணங்கள் இன்னொரு பக்கமுமாக மக்கள் பீதியில், பதற்றத்தில் இருந்தனர். வதந்திகளால் மிரண்டுபோயிருந்த அவர்களது பயத்தைப் போக்க, நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களைக் கொண்டு சேர்க்க `Covid Questions' என்ற பகுதியை விகடன் இணையதளத்தில் ஆரம்பித்தோம். கோவிட் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்றுத் தரும் `கோவிட் கொஸ்டீன்ஸ்' பகுதி, 150 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் வாசகர்களின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடாக இல்லை.
Covid Questions
Covid Questions
AP Illustration/Peter Hamlin
தொடக்கத்தில் கோவிட் தொடர்பாக மட்டும் கேள்வி கேட்ட வாசகர்கள், தற்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் வாசகர்கள். இனி அதற்கும் நாங்கள் ரெடி! ஆம், இனிமேல் கோவிட் தொடர்பாக மட்டுமல்ல; உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும், வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! என்ன... ஆரம்பிப்போமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு