Published:Updated:

Doctor Vikatan: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அறுவைசிகிச்சை செய்துகொள்ளக் கூடாதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைகளைச் செய்து கொள்ளக் கூடாது, அது உயிருக்கே ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மையா? எனக்கு பல் அறுவைசிகிச்சை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? இது பல் ஆபரேஷனுக்கு மட்டும் பொருந்துமா அல்லது அனஸ்தீசியா கொடுத்துச் செய்யப்படுகிற அனைத்து ஆபரேஷன்களுக்குமானதா?

- மதுமிதா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி
டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒரு வாரம் கழித்து எந்தவிதமான அறுவைசிகிச்சையையும் செய்துகொள்ளலாம். ஏதேனும் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திலிருப்போருக்கு, அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு மருத்துவர்களும் வலியுறுத்துவோம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் காய்ச்சல், சருமத்தில் தடிப்புகள் போன்றவை வரலாம். தடுப்பூசி போடப்பட்ட 2 முதல் 5 நாள்களுக்குள் இந்த அறிகுறிகள் வரலாம். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு மேல் இப்படிப்பட்ட எந்தப் பக்கவிளைவும் வராது. அதனால்தான் ஒருவாரம் கழித்து ஆபரேஷன் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். அதேபோல அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களும் அதற்கடுத்த 7 நாள்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மயக்க மருந்துக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri
Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாமா?

பல் மருத்துவ சிகிச்சைகளுக்கும் இது பொருந்தும். தடுப்பூசி போட்டுக்கொண்டு ஒரு வாரம் கழித்து பல் சிகிச்சைகளைச் செய்து கொள்ளலாம். மயக்க மருந்து செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சைகளையும் பயமின்றி செய்துகொள்ளலாம். இதுபோன்ற சிகிச்சைகளால் வாயினுள் காயமும் வலியும் இருக்கலாம். அதற்காக மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார்கள். அந்த மருந்துகளை முழுமையாக எடுத்து முடித்த பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போடுவதாலும் உடல்வலி, காய்ச்சல் வரலாம். இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பதைத் தவிர்க்கவே பாதுகாப்பு கருதி இந்த ஒரு வார இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு