Published:Updated:

Covid Questions: மருந்துகளால் அலர்ஜிக்கு உள்ளாகின்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தடுப்பூசி
News
தடுப்பூசி

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

எனக்கு ஜென்டாமைசின் இன்ஜெக்ஷன் அலர்ஜி உள்ளது. சென்றமுறை செலுத்திக்கொண்டபோது கைகால் வீக்கம், கழுத்து, முக வீக்கம், படபடப்பு போன்றவை வந்தன. பிறகு, எனக்கு உயிர்காக்கும் மருந்துகள் கொடுத்துதான் குணப்படுத்தினார்கள். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

- உமா (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்
ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

``உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் எந்த மருந்தும் கோவிட் தடுப்பூசிக்குத் தடையாக இருக்காது. ஆனால், சில மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, உயிருக்கே உலை வைப்பதாகவும் அமையலாம். மிக தீவிரமான அக்யூட் அனபிலாக்சிஸ் (Acute Anaphylaxis) எனப்படும் அந்த நிலையில் சிலருக்கு மூச்சே நிற்பது போலவும் ரத்த அழுத்தம் குறைந்தும், இதயத்துடிப்பு அதிகரித்தும், ஆக்ஸிஜன் அளவு குறைந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நிலைவரை போகலாம். அட்ரீனலின் இன்ஜெக்ஷன், ஸ்டீராய்டு மருந்துகள், ஆக்ஸிஜன் எல்லாம் கொடுத்துதான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை சிலருக்கு ஏற்படும். இதை அக்யூட் லைஃப் த்ரெட்டெனிங் அனபிலாக்டிக் ரியாக்ஷன் என்று சொல்வார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெனிசிலின் ஊசி போடும்போது அந்த ஊசியை வெளியே எடுப்பதற்குள் மரணமடைந்தவர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் மருத்துவ உண்மைகளே. உயிருக்கே ஆபத்தாக அமையும் அனபிலாக்சிஸ் அலர்ஜியை எதிர்கொண்டவர்கள் மட்டும் அதைப் பற்றி அறிந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் ஆலோசனையோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Manish Swarup

மற்றபடி யாராக இருந்தாலும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அதற்கு முன் மருத்துவரை சந்தித்து தனக்கு ஏற்கெனவே ஏற்பட்ட மருந்து அலர்ஜியைப் பற்றி விளக்கிச் சொல்லி, அவரின் ஆலோசனையின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவிட் தடுப்பூசி போட்ட பிறகு குறைந்தது 20 நிமிடங்கள்வரை அந்த நபரை அங்கேயே இருக்கச் சொல்லிக் கண்காணிப்பார்கள். ஒருவேளை ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் அதற்கான சிகிச்சையைக் கொடுப்பார்கள்".

நான் வலிப்பு நோய்க்கான மாத்திரை (Eptoin) எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடல் உணவு சாப்பிட்டால் எனக்கு ஒவ்வாமை ஏற்படும். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

- ஸ்ரீதர் (விகடன் இணையத்திலிருந்து)

``மற்ற மருந்து அலர்ஜி, கடல் உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற எதுவும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தடையாக இருப்பதில்லை. எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!