Published:Updated:

Covid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா?

Allergy - Representational Image
News
Allergy - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:

Covid Questions: டஸ்ட் அலர்ஜி, உணவு அலர்ஜி இருப்பதால் தடுப்பூசி போட பயமாக உள்ளது; என் பயம் சரியா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Allergy - Representational Image
News
Allergy - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

உடலில் ஆங்காங்கே சிவப்புத் திட்டுகள் இருக்கும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? அதாவது டஸ்ட் அலர்ஜி, பூச்சிக்கடி, உணவு அலர்ஜி ஏற்பட்டு இருக்கும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? தெரியாமல் போட்டுக்கொண்டால் என்ன ஆகும்? எனக்கு Cefuroxime மற்றும், Allopurinol மருந்துகள் அல்ர்ஜியை ஏற்படுத்தும். அலர்ஜி பயம் இருப்பவர்கள் எந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்? ஏதேனும் டெஸ்ட் செய்து பின்பு போட்டுக்கொள்ள வேண்டுமா?

- கபிலன் (விகடன் இணையத்திலிருந்து)

சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``உடலில் சிவப்புத் திட்டுகள் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது அர்டிகேரியா (Urticaria) எனப்படும். இது உணவு ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் இன்ஃபெக்ஷன் காரணமாக வருவது. அது கோவிட் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். கோவிட் வந்தவர்களுக்கும் இதுபோன்று சிவப்புத் திட்டுகள் வருவதைப் பார்க்கிறோம். எனவே நீங்கள் அதற்கான டெஸ்ட்டையும் செய்து பார்ப்பது பாதுகாப்பானது. கோவிட் இல்லாத நிலையில் இந்தப் பிரச்னை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தடையாக இருக்காது. நீங்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆன்டிபயாடிக் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நீங்கள் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உங்களுக்குக் கிடைக்கும் தடுப்பூசியை தாமதிக்காமல் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய கடந்தகால நோய் வரலாறு தெரிந்தவர் என்ற முறையில் உங்களுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவரால்தான் தடுப்பூசிக்கு முன்பு ஏதேனும் டெஸ்ட் அவசியமா என்பதைச் சொல்ல முடியும்.

A doctor prepares to administer vaccine
A doctor prepares to administer vaccine
AP Photo/Rafiq Maqbool

புற்றுநோயாளிகள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் மட்டும்தான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை அவசியம் கேட்க வேண்டும். மற்றபடி இப்போது கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்களைக்கூட தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறோம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!