Published:Updated:

Covid Questions: சருமப் பிரச்னைகளுக்கு சிகிச்சையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

சோரியாசிஸ், வெண்புள்ளி போன்ற சருமப் பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருப்போர் கோவிட் நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

- ராம் (விகடன் இணையத்திலிருந்து)

சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
Covid Questions: தடுப்பூசி போட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``சோரியாசிஸ், வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இதுவரை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தீவிர சோரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் methotrexate போன்ற இம்யூனோ சப்ரசென்ட்டுகளைப் பரிந்துரைத்திருப்பார்கள்.

சிலருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். அப்படிப் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் மட்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுப்பது நலம். அப்படி பிரத்யேக மருத்துவச் சிகிச்சையைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தப்படாதவர்கள் யாரும் தாராளமாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். வெண்புள்ளி பாதித்தோருக்கும் இதுதான் அட்வைஸ்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Covid Questions: மருந்துகளால் அலர்ஜிக்கு உள்ளாகின்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஆரோக்கியமாக உள்ளவர்களைவிடவும் இது போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அதன் தாக்கம் அதிகமிருக்கும் என்பதால் அவர்கள் அவசியம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு