Published:Updated:

Covid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

கர்ப்பிணி

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
கர்ப்பிணி

Covid Questions: கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?

- ஜி.ப்ரீத்தி

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர்நல சிறப்பு மருத்துவர் ஸ்ரீதேவி.

``இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள்தான் இப்போது கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களிடம் ட்ரையல் பார்க்கப்படவில்லை என்பதால் இந்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை இதுவரை பரிந்துரைக்கவில்லை. ஆனால், mRNA வகை புதிய தடுப்பூசிகளான மாடர்னா மற்றம் ஃபைஸர் இரண்டும் அமெரிக்காவில் கர்ப்பிணிகளுக்குச் செலுத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுவரை அவர்களில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இருந்ததாகத் தகவல்கள் இல்லை. ஆனால், mRNA வகை தடுப்பூசிகள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. FOGSI (Federation of Obstetrics and Gynecological society of India ) அமைப்பானது, கிடைக்கிற தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குச் செலுத்துமாறு அறிவுறுத்துகிறது. எனினும், அதற்கு இந்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணிகள் கூடியவரையில் கொரோனா தொற்று ஏற்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், கூடவே அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்களும் இருந்தால் பாதிப்பு தீவிரமாகி ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிற அளவுக்குக் கொண்டு போகலாம். இறப்பு விகிதமும் இவர்களிடம் அதிகம். கர்ப்பிணிகள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தாரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!