Published:Updated:

Doctor Vikatan: சாப்பாட்டுக்குப் பிறகு கடலைமிட்டாய்; ஆரோக்கியமானதா?

கடலைமிட்டாய்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: சாப்பாட்டுக்குப் பிறகு கடலைமிட்டாய்; ஆரோக்கியமானதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
கடலைமிட்டாய்

தினமும் சாப்பிட்டவுடன் ஒரு கடலை மிட்டாய் சாப்பிடுவது நிறுத்த முடியாத பழக்கமாகிவிட்டது. லீவில் வீட்டிலிருக்கும் நாள்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்குப் பிறகும் கடலை பர்பி சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இது நல்லதா? இந்தப் பழக்கம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என வீட்டில் பயப்படுகிறார்கள். அது உண்மையா?

- முருகன் (விகடன் இணையத்திலிருந்து)

கற்பகம்
கற்பகம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, டயட்டீஷியன் கற்பகம்.

``உணவு சாப்பிட்ட பிறகு உடனே ஸ்வீட் சாப்பிடும் இந்தப் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. இப்படி இருந்தால் உடலில் ஏதோ சத்துக்குறைபாடு இருப்பதாக அர்த்தம். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி தினமும் மூன்று வேளைகளும் உணவுக்குப் பிறகு கடலை மிட்டாய் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமல்ல. அது கொலஸ்ட்ரால் அளவை நிச்சயம் அதிகரிக்கும். தவிர வேர்க்கடலை சாப்பிடுவதால் கை, கால்களில் வலி வர வாய்ப்பிருக்கிறது. முழுமையான உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதால் உடல் எடையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். எனவே, அதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்றோ ஒருநாள் இப்படிச் சாப்பிடுவதில் பிரச்னை இல்லை. தினமும் சாப்பிடுவது, அதிலும் ஒரு முழு பார் அளவுக்குச் சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற தேடல் அதிகரிக்கும்போது பேரீச்சம்பழம், அத்திப்பழம், ப்ரூன்ஸ், 80 சதவிகித டார்க் சாக்லேட், எள்ளுருண்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடலாம். இனிப்புத் தேடலைக் கட்டுப்படுத்த பழங்கள்கூட சாப்பிடலாம். கூடவே ஆல்மண்டு பட்டர் எனப்படும் பாதாமிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம்.

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்

பெண்களுக்கு, பீரியட்ஸுக்கு முன்னாடி இப்படிப்பட்ட இனிப்புத் தேடல் ஏற்படுவது சகஜம். அவர்களும் மேற்குறிப்பிட்டபடியான ஆரோக்கிய சாய்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது. மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏதேனும் சத்துக்குறைபாடு உள்ளதா என்பதற்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுப் பின்பற்றுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?