Published:Updated:

Covid Questions: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கா்ப்பப்பை நீக்கிய பெண்கள் தடுப்பூசி பாேட்டுக்கொள்ளலாமா ?

- பார்வதி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``உங்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை எப்போது செய்யப்பட்டது என்ற தகவல் இல்லை. இந்த வாரம்தான் அந்த ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது என்றால் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்குத் தள்ளிப்போடுவது சிறந்தது. ஏனென்றால் இப்போதுதான் அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது என்பதால் அதனால் ஏற்படக்கூடிய உடனடி பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு உங்களால் உடனே எழுந்து நடமாட முடியாது. அந்த அறுவை சிகிச்சையின் விளைவாக காய்ச்சல் வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி, எரிச்சல் போன்ற அசௌகர்யங்கள் இருக்கலாம். எனவே இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் உங்கள் உடல் உணரும் அசௌகர்ய அறிகுறிகளை தடுப்பூசியின் விளைவுகளா, அறுவை சிகிச்சையின் விளைவுகளா என தெரியாமல் குழப்பிக் கொள்ள நேரலாம்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Steven Senne

அதைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் அறுவை சிகிச்சை முடிந்து 3 வாரங்கள் கழித்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பான முறையான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை என்றாலும், ஓர் அந்நியப் பொருள் (தடுப்பூசி) நம் உடலுக்குள் நுழைவதால் நோய் எதிர்ப்புத்திறனில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். அதனால்தான் இந்த இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு அறுவை சிகிச்சைக்காகத் திட்டமிடுகிறார்கள் என்ற நிலையில், அதை எத்தனை நாள் இடைவெளியில் செய்துகொள்ளலாம் என்ற கேள்வியும் சிலருக்கு இருக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டு 10 முதல் 20 நாள்கள் கழித்து அறுவை சிகிச்சையைத் திட்டமிடலாம். அதாவது தடுப்பூசியால் உண்டாகும் எதிர்ப்பாற்றலை உடல் பெற்ற பிறகு அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடுவது சிறந்த முடிவாக இருக்கும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!