Published:Updated:

`எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல!' - 4-ம் அலை கணிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா 4-ம் அலை கணிப்பு

``ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியானது குறிப்பிட்ட சில தரவுகளைக் கொண்டு கணித அடிப்படையில் நடத்தப்பட்டது. இதுபோன்ற ஆராய்ச்சிகளில் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து ஆய்வுசெய்து முடிவுகள் கணக்கிடப்படும்."

`எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல!' - 4-ம் அலை கணிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம்

``ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியானது குறிப்பிட்ட சில தரவுகளைக் கொண்டு கணித அடிப்படையில் நடத்தப்பட்டது. இதுபோன்ற ஆராய்ச்சிகளில் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து ஆய்வுசெய்து முடிவுகள் கணக்கிடப்படும்."

Published:Updated:
கொரோனா 4-ம் அலை கணிப்பு

ஜூன் 22-ம் தேதி இந்தியாவில் கோவிட் தொற்றின் 4-வது அலை வரலாம் என்று ஐஐடி கான்பூர் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து அது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும் எழத் தொடங்கின. நேரம், காலம் குறித்து ஜாதகம் பார்த்து அலை வருமா என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பிரிஜ்லால் கேள்வியெழுப்பியிருந்தார்.

parliment
parliment
vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சமர்ப்பித்த தகவலில், இந்தியாவில் அடுத்த அலை வரும் என்பது தொடர்பாக எந்தக் கணிப்பையும் ஐஐடி கான்பூர் வெளியிடவில்லை. அது அந்தக் கல்வி நிறுவனத்தில் கணிதத்துறை ஆராய்ச்சி வல்லுநர்களால் நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சி. தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட கணித ரீதியான ஆராய்ச்சி முடிவுகள் வேறு எந்த வல்லுநர்களாலும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாகப் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரும் மருத்துவருமான பாரதி, ``ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியானது குறிப்பிட்ட சில தரவுகளைக் கொண்டு கணித அடிப்படையில் நடத்தப்பட்டது. இதுபோன்ற ஆராய்ச்சிகளில் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து ஆய்வுசெய்து முடிவுகள் கணக்கிடப்படும்.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

இதுபோன்ற ஆய்வுகள் சிறிய பரப்பளவைக் கொண்ட நாடுகள் மண்டலங்களுக்கு கிட்டத்தட்ட சரியான கணிப்பைத் தெரிவிக்க முடியும். ஆனால், பல்வேறு தரப்பு மக்கள் வாழும் பெரிய நாடுகளில் அதுபோன்ற கணிப்புகள் தொடர்ந்து தோல்வியடையவே செய்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த தகவலில், உள்நாட்டிலும் உலக அளவிலும் கோவிட்-19 தொற்றுப் பரவல் குறித்த விஷயங்களைப் பல்வேறு நிபுணர் குழுவினருடன் இணைந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பரிசோதனை, தொடர் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய ஐந்து உத்திகளைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Corbevax vaccine for COVID-19
Corbevax vaccine for COVID-19

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மார்ச் 31-ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட வாய்ப்பில்லை, முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியையும் தளர்த்தலாம் என்று எய்ம்ஸ் மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism