Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 25 - வாழ்க்கைமுறையை மாற்றினால் சர்க்கரை நோய் நம் கட்டுக்குள்!

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

சிலருக்கு வெறும் வயிற்றில் 110-க்கு குறை வாகவும் இருக்காது. 126-க்கு அதிகமாகவும் இருக்காது. சாப்பாட்டுக்குப் பிறகு 200-க்கு மேல் இருக்காது

செக் ஃப்ரம் ஹோம் - 25 - வாழ்க்கைமுறையை மாற்றினால் சர்க்கரை நோய் நம் கட்டுக்குள்!

சிலருக்கு வெறும் வயிற்றில் 110-க்கு குறை வாகவும் இருக்காது. 126-க்கு அதிகமாகவும் இருக்காது. சாப்பாட்டுக்குப் பிறகு 200-க்கு மேல் இருக்காது

Published:Updated:
செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
செக் ஃப்ரம் ஹோம்

உலகிலேயே சர்க்கரை நோயின் தலைமையிடமாக இந்தியா உள்ளது. ஒரு காலத்தில் வயதானவர்களின் நோயாக இருந்தது இன்று 25, 35 வயதினரையும் பாதிக்கிறது. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கம், உடலுழைப்பு குறைந்தது என மாறிய வாழ்க்கைமுறைதான் முக்கிய காரணம். பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மட்டுமே பிள்ளை களுக்கும் வரும் என்ற காலம்போய், யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

 ஜி.பிரபாகரன்
ஜி.பிரபாகரன்

எது சர்க்கரை நோய்?

நாம் சாப்பிடும் உணவு ரத்தச் சர்க்கரையாக மாறும். அதை நம் செல்களுக்கு அனுப்பி ஆற்றலாக மாற்றுவதற்கு இன்சுலின் தேவை. கணையத்துக்கு பளு அதிகமாகி போதுமான இன்சுலினை சுரக்க முடியாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை சர்க்கரை நோய் என்கிறோம். இது நோயல்ல, குறைபாடு தான். உடல் பருமன், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், குடும்பப் பின்னணி போன்றவற்றால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

இரண்டு வகை

டைப் 1: இன்சுலின் உற்பத்தியாகும் அணுக்கள் கணையத்தில் அழிந்து போவதால் ஏற்படுவது. இவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வேலை செய்யாது. இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டைப் 2: வாழ்க்கைமுறை மாற்றத் தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது. இதுதான் மிகவும் பொதுவான பாதிப்பு. கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதும் இந்த வகைதான்.

எப்படிக் கண்டறிவது?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, வெறும் வயிற்றில் 110 mg/dL-க்கு

(ஒரு டெசிலிட்டருக்கு 110 மில்லிகிராம்) கீழே இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு 140-க்கு கீழ் இருக்க வேண்டும். காலை உணவுக்கு முன் 126-க்கு மேல், உணவுக்குப் பின் 200-க்கு மேல் இருந்தால் அது சர்க்கரை நோய்.

சிலருக்கு வெறும் வயிற்றில் 110-க்கு குறை வாகவும் இருக்காது. 126-க்கு அதிகமாகவும் இருக்காது. சாப்பாட்டுக்குப் பிறகு 200-க்கு மேல் இருக்காது. ஆனால் 140-க்கு மேல் இருக்கும். இதை சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை (Pre Diabetes) என்கிறோம். வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடலுழைப்பை அதிகரித்தல் போன்ற வற்றின் மூலம் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

செக் ஃப்ரம் ஹோம் - 25 - 
 வாழ்க்கைமுறையை மாற்றினால் சர்க்கரை நோய் நம் கட்டுக்குள்!

அறிகுறிகள்

சோர்வு

நடக்கும்போது கால் மரத்துப்போவது, தசைப்பிடிப்பு, கூசுவது போன்ற உணர்வு

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

எடையிழத்தல்

அதிக தாகம்

காயம், புண் ஆறுவதற்கு தாமதமாதல்

சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு, புண்

பார்வை மங்குதல்

சுய பரிசோதனை

மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளுக்கோமீட்டரில் பரிசோதிக்கலாம். காலையில் எழுந்ததும் காபி, டீ என எதுவும் சாப்பிடுவதற்கு முன்பு விரலில் ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்து பரி சோதித்துப் பார்க்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

தீவிரம்

அலட்சியப்படுத்தினால் ரத்தக்குழாய் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் ஸ்ட்ரோக் வரலாம், காலுக் குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு விரல்கள், கால்களை நீக்க வேண்டிய நிலை வரலாம். சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம், கண்ணுக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் பார்வை இழப்பு ஏற்படலாம். இதே போல சிறிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படலாம். கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், வயிற்றில் நீர் கோப்பது அதிகரிக்கும். குழந்தையின் எடை அதிகரித்து சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தகவல்: ஜி.பிரபாகரன்,

சர்க்கரை நோய் மருத்துவர், சென்னை