Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 27 - லோ பிபி... நோயல்ல அறிகுறி!

லோ பிபி
பிரீமியம் ஸ்டோரி
லோ பிபி

‘சிஸ்டாலிக்’ என்பது இதயத் துடிப்பின் போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அழுத்தத் தைக் குறிப்பது

செக் ஃப்ரம் ஹோம் - 27 - லோ பிபி... நோயல்ல அறிகுறி!

‘சிஸ்டாலிக்’ என்பது இதயத் துடிப்பின் போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அழுத்தத் தைக் குறிப்பது

Published:Updated:
லோ பிபி
பிரீமியம் ஸ்டோரி
லோ பிபி

‘எனக்கு லோ பிபி இருக்கு’ என்று பலர் சாதாரணமாகச் சொல்வதைக் கேட்டிருப் போம். அது பெரிய பிரச்னை இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

டாக்டர் கே.அதிதி
டாக்டர் கே.அதிதி

ரத்த ஓட்டத்தின்போது ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரில் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தம் தேவைக்கு அதிகமாகும்போது அது உயர் ரத்த அழுத்தம் (Hypertension) என்றும், குறையும்போது குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension) என்றும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது படுத்துவிட்டு எழுந்து நிற்கும்போது சட்டென்று ரத்த அழுத்தம் குறையும். ‘போஸ்ச்சுரல் ஹைபோ டென்ஷன்’ (Postural Hypotension) எனப்படும் இந்தப் பிரச்னைதான் அதிகம் காணப்படுகிறது. மக்கள்தொகையில் 17 - 31% பேருக்கு இந்த வகை குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அறிகுறிகள்...

தலைச்சுற்றல்

மயக்கம் வருவது போன்ற உணர்வு

இதயத்துடிப்பு அதிகரித்தல்

உட்கார்ந்து, தூங்கி எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றும் உணர்வு

சுயபரிசோதனை!

வீட்டிலேயே ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் ஸ்ஃபக்மோமொனா மீட்டர் (Sphygmomanometer) எனப்படும் கருவியை வாங்கிப் பரிசோதிக்கலாம். அதில் `சிஸ்டாலிக்' (Systolic), `டயஸ்டாலிக்' (Diastolic) என்ற இரண்டு அளவீடுகள் இருக்கும்.

‘சிஸ்டாலிக்’ என்பது இதயத் துடிப்பின் போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அழுத்தத் தைக் குறிப்பது. ‘டயஸ்டாலிக்’ என்பது இதயத் துடிப்புக்கு இடையே ஏற்படும் அழுத்தத்தைக் குறிப்பது. சிஸ்டாலிக் அளவு 90-க்கு கீழ், டயஸ்டாலிக் அளவுக்கு 60-க்கு கீழே இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம்.

சுயபரிசோதனையில் கவனம்

தொடர்ச்சியாக பிபியை கண்காணிக்கும் போது நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதிக்க வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் உந்துதல் இருக்கும்போது பரிசோதிக்கக் கூடாது.

காபி, டீ குடித்த அரை மணி நேரத்துக்கு பரிசோதனை செய்யக்கூடாது.

பரிசோதனை செய்வதற்கு முன்பு 5 நிமிடங் களாவது ரிலாக்ஸ்டாக இருந்துவிட்டு பின்பு பரிசோதிக்க வேண்டும்.

கால் மேல் கால் போட்டுக்கொள்வது, கால்களை குறுக்காக வைத்துக் கொள்வது ஆகிய நிலைகளிலும் பரிசோதிக்கக்கூடாது. இரண்டு பாதங்களும் தரையில் படும்படி உட்கார வேண்டும்.

உட்கார்ந்த நிலையில் பரிசோதிக்க வேண்டும். கையை மேசை அல்லது நாற்காலிமீது வைத்த நிலையில் பரிசோதிக்க வேண்டும்.

செக் ஃப்ரம் ஹோம் - 27 - லோ பிபி... நோயல்ல அறிகுறி!
Deepak Sethi

காரணங்கள்...

உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது, காய்ச்சல், உடல்நலக் குறைவால் ஓய்வில் இருப்பவர்கள், போதிய தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஏதாவது நோய்த் தொற்று, கர்ப்பகாலம், இதயத்தில் ஏதேனும் பிரச்னை, நரம்பு சார்ந்த பிரச்னைகள், பல ஆண்டுகளாக சர்க்கரைநோயால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்னை ஏற்படலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தால்தான் இந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். அதனால் அறிகுறிகள் தோன்றினாலோ, சுய பரிசோதனையில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலோ உடனே மருத்துவர் ஆலோ சனையைப் பெற வேண்டியது அவசியம். உயர்ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இரண்டுக்கும் சில பொதுவான அறிகுறிகள் தோன்றும் என்பதால் சுய மருத்துவத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தகவல்: டாக்டர் கே.அதிதி, இன்டர்னல் மெடிசின், சென்னை