ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 9 - தொண்டைச்சதை வீக்கம்... அறிகுறிகள், தீர்வுகள்

தொண்டைச்சதை வீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொண்டைச்சதை வீக்கம்

டான்சிலைட்டிஸ் பிரச்னை இருந்தால் தொண்டைப் பகுதியின் இருபுறங்களிலும் சதைபோன்று வீங்கி பெரிதாகக் காணப் படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை களில் ஒன்று டான்சி லைட்டிஸ். இதை, பேச்சு வழக்கில் ‘டான்சில்ஸ்’ என்றோ, ‘தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது’ என்றோ குறிப்பிடு கிறோம்.

வாயில் ஏற்படும் தொற்றுகளைத் தடுத்து அதற்கு எதிராக ஆன்டிபாடியை உற்பத்தி செய்வதற்கு தொண்டையின்பின்பகுதி, மேல் வாய்ப்பகுதி, மூக்கின் பின்பகுதியில் பல்வேறு திசுக்கள் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் தொண்டையின் பின்பகுதியில் காணப்படும் `டான்சில்’ (Tonsil) எனும் திசு. இது நிணநீர் திசு (Lymphoid tissue) வகையைச் சேர்ந்தது. தொண்டையின் இரண்டு பக்கங்களிலும் டான்சில் காணப்படும். அவற்றில் ஏற்படும் வீக்கம் ‘டான்சிலைட்டிஸ்’ அல்லது ‘தொண்டைச்சதை வீக்கம்’ எனப்படும்.

ஆர்.ராமகிருஷ்ணன்,
ஆர்.ராமகிருஷ்ணன்,

யாருக்கு...ஏன்?

உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஒவ்வாமை, குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம். இவர்கள் பெரிதாகும்போது அது தொடரலாம். மோனோ சோடியம் குளுட்டமேட், நொறுக்குத் தீனிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது டான்சிலி லிருந்து ஆன்டிபாடி உற்பத்தியாகும். அடிக்கடி இது நிகழும்போது டான்சில் எப்போதும் ஆக்டிவ்வாகவே இருக்கும். ஒரு நிலையில் அதில் வீக்கம் ஏற்பட்டும் அளவு பெரிதாகும்.

சுயபரிசோதனை

* டார்ச் லைட் அல்லது செல்போன் லைட்டை ஆன்செய்து இதைப் பரிசோதிக்க லாம்

* குழந்தையை வாயை நன்றாகத் திறக்கச் செய்து, நாக்கை வெளியே நீட்டச் செய்ய வேண்டும்.

* நாக்கை நீட்டும்போது தொண்டையின் பின்பகுதி தெரியும். அதில் இடது, வலது என இரண்டு பக்கங்களையும் லைட் அடித்துப் பார்க்க வேண்டும்.

* டான்சிலைட்டிஸ் பிரச்னை இருந்தால் தொண்டைப் பகுதியின் இருபுறங்களிலும் சதைபோன்று வீங்கி பெரிதாகக் காணப் படும்.

* வீக்கம் ஏற்பட்ட பகுதி ஸ்ட்ராபெர்ரி நிறத்திலோ அல்லது அந்த நிறத்தின்மீது வெள்ளை நிறப் புள்ளிகள் போன்றோ தெரிந்தால் டான்சிலைட்டிஸ் பிரச்னையாக இருக்கலாம்.

* இதுதவிர, காய்ச்சல், வாயைத் திறக்க முடியாத அளவு தொண்டைவலி, கீழ்த் தாடையில் நெறி கட்டியிருப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 9 - தொண்டைச்சதை வீக்கம்... அறிகுறிகள், தீர்வுகள்

தீர்வுகள், சிகிச்சைகள்....

பிரச்னையை சரியான நேரத்தில் கவனிக்க வில்லை என்றால் அடிக்கடி அந்தப் பகுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டும். தொற்றுடன் காய்ச்சல் ஏற்பட்டால் அந்தக் கிருமி, ரத்தத்தில் கலந்து, சிறுநீரகத்தை பாதிக்கும்.

இதயம் மற்றும் நுரையீரல் வால்வுகளில் அந்தக் கிருமி தேங்கும் வாய்ப்புள்ளது. மீண்டும் மீண்டும் தொற்று ஏற்பட்டால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். அடிக்கடி தொற்று ஏற்படும்போது ஒரு கட்டத்தில் டான்சில் இறுகிப் போய் அதன் செயல்பாடு குறைந்துவிடும்

ஆரம்ப நிலையிலேயே மருத் துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள் வது மட்டுமன்றி குளிர்ந்த உணவுகளைத் தவிர்ப்பது, ஒரு நாளைக்கு இரண்டு முறை உப்புநீரில் வாய்க்கொப்பளிப் பது போன்றவற்றால் பிரச்னை யைச் சரிசெய்துவிடலாம். ஆரம்பநிலை சிகிச்சைக்கு பிரச்னை கட்டுப்படவில்லை என்றால் அறுவை சிகிச்சைதான் தீர்வு.

தகவல்: ஆர்.ராமகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், சென்னை