Published:Updated:

`ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 31 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா!' -சென்னையில் தொடரும் அதிர்ச்சி

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

சென்னையில் மட்டும், தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. நேற்று, 1,243 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது 25,000-த்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் தென்னிந்தியாவில், சென்னையிதான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

மருத்துவப் பணியாளர்கள்
மருத்துவப் பணியாளர்கள்
மாதிரிப்படம்

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைதான் தீவிரமாக செயல்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவப் பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

அவ்வப்போது, நாடு முழுவதும் இருந்து மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுகுறித்து தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களும் மருத்துவப் மணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறுகையில், ``மருத்துவர்கள், செவிலியர்கள் என ராஜீவ் காந்தி மருத்துவமனைப் பணியாளர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள், இந்த மருத்துவமனைப் பணியார்கள்தான் என்றபோதும், இங்கு பணியாற்றவில்லை. சென்னை நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்களில் மூவர், மருத்துவர்கள். முதல்நிலை, இரண்டாம் நிலை செவிலிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனை செவிலியர்கள் போதுமான பணியாளர்கள் பணியில் இல்லை என்றும் போதுமான பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

சென்னையில் மட்டும் தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. நேற்று 1,243 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில், கொரோனா பாதிப்பு தற்போது 25,000-த்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவித்துவந்தாலும், அது தொடர்பான விவாதங்கள் தினமும் நடைபெற்றுதான் வருகிறது. இந்த நிலையில், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு