பச்சிளம் குழந்தையைக் குளிக்க வைப்பதற்கு தனித்திறமை வேண்டும். கூட்டுக்குடும்பம் இருந்தவரை குழந்தையின் தாய்வழிப் பாட்டியோ, தந்தைவழிப் பாட்டியோ குழந்தையைக் குளிப்பாட்டிவிடுவார்கள். தனிக்குடித்தனங்கள் வந்த பிறகு, அந்தத் தெருவில் அல்லது ஏரியாவில் இருக்கும் அனுபவசாலிப் பெண்கள் பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்ட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, இதுவொரு தொழிலாகவும் மாற ஆரம்பித்தது. தற்போது, கொரோனா பயத்தால், வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதால், குழந்தைகளைக் குளிப்பாட்டத் தெரிகிறதோ இல்லையோ, அம்மாக்கள்தான் செய்ய வேண்டிய கட்டாயம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவவே இந்தப் பக்கங்கள்...

- குழந்தைநல மருத்துவர் பழனிராஜ்

1. குழந்தைக்கு பேபி ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி உடல் முழுக்க மசாஜ் செய்யவும்.

2. குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு, பவுடர் போடவே கூடாது. பவுடரில் கலந்திருக்கும் கெமிக்கல் குழந்தையின் நுரையீரலுக்குள் சென்றால், இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.

3. குழந்தைக்குத் தலைக்கு ஊற்றிய பிறகு, சாம்பிராணியும் போடக் கூடாது. தலையில் ஈரம் போக நன்கு துவட்டுங்கள். சாம்பிராணிப்புகை மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம்.

4. தலைக்கோ, உடம்புக்கோ ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் குழந்தையைக் குளிப்பாட்டி விட வேண்டும்.

5. உங்கள் புறங்கை பொறுக்கும் சூட்டில்தான் குழந்தைக்கு வெந்நீர் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால்தான் குழந்தை அசந்து தூங்கும் என்பது உண்மையல்ல. குழந்தை குளித்தாலே நன்கு உறங்கிவிடும்.