Published:Updated:

ஓ... பாப்பா லாலி!

ஓ... பாப்பா லாலி!
பிரீமியம் ஸ்டோரி
ஓ... பாப்பா லாலி!

#HowToPrepare

ஓ... பாப்பா லாலி!

#HowToPrepare

Published:Updated:
ஓ... பாப்பா லாலி!
பிரீமியம் ஸ்டோரி
ஓ... பாப்பா லாலி!

சரணி ராம்

15 நாள்களுக்கு ஒரு முறையாவது குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் அவசியம். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு மசாஜ் ஆயில் என்ற பெயரில் கடைகளில் எண்ணெய்கள் கிடைக்கின்றன. ஆனால், அந்த எண்ணெய்களில் வாசனைக்காக சில கெமிக்கல்கள் பயன்படுத்துகிறார்கள். அவை சில குழந்தைகளுக்கு சரும வறட்சியை உண்டாக்கும் .

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், விளக்கெண்ணெய் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெந்தயம் - சிறிதளவு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து அடுப்பில் வைத்து லேசாக சூடு படுத்துங்கள். எண்ணெய் சற்று ஆறியதும் குழந்தைகளின் உடல், தலை என எல்லா இடங்களிலும் எண்ணெய்யை மிருதுவாகத் தேய்த்துவிட வேண்டும். பிறந்த குழந்தை எனில் பெரியவர்கள் கைகளால் எண்ணெய் தடவினாலே போதும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் மிதமான மசாஜ் செய்யலாம். எண்ணெய் தேய்க்கும்போது குழந்தைகளின் கைகால்களை இழுத்து விடுவது, விரல்களில் நெட்டி எடுப்பது போன்ற வற்றைச் செய்யக் கூடாது.

ஓ... பாப்பா லாலி!

எண்ணெய் தேய்த்து குழந்தையை 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் (காலை 6 - 8 மணி வெயிலில் ) காட்டுங்கள்.பிறகு, மிதமான வெந்நீர் வைத்து, குளியல் பொடி தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். குழந்தைகள் உடல் அலுப்பு நீங்கி சுறுசுறுப்பாக இருப் பார்கள். மேலும், உடல் சூடு நீங்கி குளிர்ச்சியாகவும் இருக்கும்.

குழந்தையைக் குளிப் பாட்டிய பின்னர் தலையில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காட்டன் துண்டு பயன்படுத்தி மிருதுவாகத் துடைத்து எடுக்க வேண்டும். குழந்தைகளின் தலை முடியை உலர்த்த டிரையர் பயன்படுத்தக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism