Published:Updated:

இயல்புவாழ்க்கைக்குத் திரும்புகிறது சீனா... இந்த நிலை தொடருமா?

சீனா
சீனா ( AP )

தடைகள் நீக்கப்பட்டால் முன்பைவிட நிலை மோசமாகிவிடுமா சீனாவில்?

2019 டிசம்பர் மாதம், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வெடித்துப் பரவி, இன்று உலகெங்கிலும் 12,700-க்கும் அதிகமான மக்களைக் கொன்றழித்தது. இதேநிலை பல நாடுகளிலும் தொடர்ந்துகொண்டிருக்க, கடந்த இரண்டு நாள்களாக, வுஹானில் கோவிட் -19 தொற்று பரவவில்லை என்பது முதல் முறையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாஸ்க்
மாஸ்க்

சீனாவில் முன்பு ஏறிக்கொண்டிருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அந்நாட்டின் மருத்துவர்களின் சேவை மனப்பான்மையும் கடின உழைப்பு மற்றும் சரியான திட்டமிடலும் ஆகும். அவர்களைப் பாராட்டி நன்றி கூறி மேலும் உற்சாகம் அளிக்கும் விதத்தில்

வுஹான் நகரத்தில்,
பல உயர்ந்த கட்டடங்களில் மருத்துவர்களின் படங்கள் எல்.ஈ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சீனா, மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் நம்பிக்கை தரும் வரிகளையும் மருத்துவர்களின் படங்களுடன் இணைத்திருந்தனர் மக்கள்.

'தனி வாட்ஸ்அப் எண்.. குழந்தைகள் காமிக்ஸ்!' -முடுக்கிவிடப்படும் கொரோனா விழிப்புணர்வு முயற்சிகள்

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) பேசிய போது,

அனைத்து நாடுகளும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நிலைமை தலைகீழாகக்கூட மாறலாம். சீனாவில் புதிய கொரோனா தொற்றுகள் இல்லாத நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் பயமுறுத்துகிறது. அதே வேளையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிற நாடுகளின் நிலைமை, பிற நாடுகளுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது. சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படாதது கொரோனாவிலிருந்து மீள முடியும் என்னும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.

டாக்டர் டெட்ரோஸ்
டாக்டர் டெட்ரோஸ்

''மருத்துவ வசதிகள், சுகாதார அமைப்புகள் மற்றும் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பது மிகப்பெரிய கவலை'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) கூறினார். ஆனால், வரலாற்றில் எந்தவொரு தொற்றுநோயையும் போலல்லாமல், இதிலிருந்து மீளும் சக்தி நம்மிடம் உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவிட்-19 வெடித்தெழுந்த மையமான வுஹானில், புதிதாக யாரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஆனால், வெளிநாடுகளிலிருந்து சீனா வந்தவர்களுள் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி, சீனாவுக்கு மட்டுமல்ல எந்த நாடானாலும் கொரோனா வைரஸை முற்றிலுமாக அகற்றுவது கடினம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

சீனாவில், மக்கள் பொதுவெளியில் அதிகம் புழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளதை அடுத்தே கோவிட்-19 தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இந்தத் தடைகள் நீக்கப்பட்டால், முன்பைவிட நிலை மோசமாகிவிடுமோ என்ற கேள்வியையும் சீன மக்களிடம் எழுப்பியிருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு