Published:Updated:

`சீனா செய்த அதே தவற்றை, ஐரோப்பாவும் செய்கிறது!" `- வருந்தும் சீன மருத்துவர்கள்

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

``மருத்துவப் பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்''

கோவிட் - 19 பாதிப்பானது, உலகளவில் மிகத்தீவிரமான பயத்தை உருவாக்கி வரும் சூழலில், ஐரோப்பாவில்தான் கடந்த சில வாரங்களாக வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதாக சீன அரசின் இணையதளத்தில் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

COVID - 19
COVID - 19

இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மூவர், சீனா செய்த முக்கியமான ஒரு தவற்றைதான், ஐரோப்பாவும் செய்கிறதென்றும், அதனால்தான் அங்கு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில், ஐரோப்பா மீது குற்றம் சுமத்தியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த பல மருத்துவர்களும் அந்தக் கருத்தை ஆமோதித்தும் உள்ளனர். அந்த மூவர் குறிப்பிட்ட தவறு - `மருத்துவப் பணியாளர்களின் உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமை'.

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

இப்போதைக்கு ஐரோப்பா உட்பட பல நாடுகளும் தம் மருத்துவப் பணியாளர்களுக்குக் கொடுக்கும் தற்காப்பு உபகரணங்கள் - மாஸ்க், காகிள்ஸ், சானிடைஸர் போன்றவை மட்டும்தான். ஒவ்வொரு நோயாளியைக் கவனித்துக்கொண்ட பிறகும், மாஸ்க் மற்றும் காகிள்ஸைக் கழற்றி மாற்றவோ, சுத்தப்படுத்தி உபயோகிக்கவோ முடியாது என்பதால், நெருக்கடிக்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு பொருளையே வெகுநேரத்துக்குப் பணியாளர்கள் உபயோகப்படுத்தும் சூழலுக்கு உள்ளாகின்றனர்.

மாஸ்க்
மாஸ்க்
ஏற்கெனவே நோயாளிகளோடு புழங்கிக்கொண்டிருக்கும் அவர்கள், சுகாதாரமின்மையோடு இருந்தால் தொற்று பரவுதலுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்.

வூகானில் நோய் பாதிப்பு அதிகரித்ததன் பின்னணியில், மருத்துவப் பணியாளர்களை கவனித்துக் கொள்ளாமையே முக்கியக் காரணம் என்கிறார்கள் அந்த மூன்று மருத்துவர்கள்.``சீனாவில், கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு, இறந்த மருத்துவப் பணியாளர்கள் பலரும் 20 - 30 வயதை ஒட்டியவர்கள்தான் என்பதால், `சிறு வயது மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பாதிப்பின் தீவிரத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம்' என எந்த நாட்டின் அரசும் நம்ப வேண்டாம்" என்றும் கூறியுள்ளார்கள்.

`டெஸ்ட், டெஸ்ட், டெஸ்ட்!' - உலக நாடுகளை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்

`நோய் பாதிப்பு தெரியவரும் உலக நாடுகள் அனைத்தும், வரும் நாள்களில் தங்கள் மருத்துவப் பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என்று அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு