Published:Updated:

`இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15,000’ - சீன ஆய்வாளர்கள் சொல்லும் ஜூன் மாதக் கணக்கு #Corona

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை ஜூன் மாத மத்தியில் 15,000-த்தைக் கடக்கும் என சீன ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 1,98,706-லிருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. தற்போது வரை இந்த எண்ணிக்கை 1,00,303 என்ற அளவில் இருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598-லிருந்து 5,815 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இந்தநிலையில், இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஜூன் மாத மத்தியில் 15,000 என்ற அளவைத் தாண்டும் என்கிறார்கள் சீன ஆய்வாளர்கள். சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள லான்ஸு பல்கலைக்கழகத்தைச் (Lanzhou university) சேர்ந்த ஆய்வாளர்கள் தினசரி உலக அளவில் 180 நாடுகளின் தரவுகளைக் கொண்டு தினசரி பாதிப்பு எண்ணிக்கையைக் கணித்து வெளியிட்டு வருகிறார்கள்.

`அறிகுறிகள் இல்லாதவர்களுக்குக் கொரோனா பரிசோதனை அவசியமா?' #ExpertOpinion

ஜூன் 2-ம் தேதியைப் பொறுத்தவரை இந்தியாவில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 9,291 ஆக இருக்கும் என்று அவர்கள் கணித்திருந்தனர். அதேநேரம், இந்தியாவில் ஜூன் 2-ம் தேதி இதுவரை இல்லாத உச்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை (ஜூன் 3) முதல் அடுத்த 4 நாள்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,676, 10,078, 10,498 மற்றும் 10,936 என சீராக உயரும் என அவர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

மற்றொரு உதாரணமாக இந்தியாவில் கடந்த மே 28-ல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,467 ஆகும். அந்த நாளில் 7,607 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்படும் என லான்ஸு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய லான்ஸு பல்கலைக்கழக நிர்வாகி ஹுவாங் ஜியாங், ``இந்தியாவின் தினசரி பாதிப்பு குறித்த எங்களது கணிப்பு கடந்த மே 28-ம் தேதி மிகநெருக்கமாக இருந்தது. எங்களது கணிப்பு தொடக்கநிலையில் இருக்கிறது. இதில் ஏற்படும் தவறுகள் குறித்து ஆய்வு செய்து, அதை சரிசெய்து அதுகுறித்த தகவல்களை எங்கள் இணையத்தில் வெளியிட இருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு - 25,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை! #NowAtVikatan

ஜூன் 15 வாக்கில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 15,000 என்ற அளவில் இருக்கும். இந்தியாவில் கடந்த மூன்று நாள்களாகத் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 8,000-த்தைக் கடந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல், ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் தினசரி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடக்கும் என்று கூறியுள்ள சீன ஆய்வாளர்கள், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும் கணித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மக்கள் தொகை அடர்த்தி, காலநிலை மற்றும் க்வாரன்டீன் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் எண்ணிக்கைக் கணிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தக் காரணிகள் மாறுபடும் என்றும் லான்ஸு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். `இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது குறைகிறது. இதனால், பாதிப்பும் அதிகமாகிறது. அதேநேரம், இந்த விவகாரத்தில் வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துவது குறைவே’’ என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு