Published:Updated:

எப்போதும் சளி, இருமலா? நுரையீரல் அடைப்பு நோயாக இருக்கலாம்... | #World COPD Day 2022

நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா ( காவேரி மருத்துவமனை )

சிலர் எப்போதும் சளி இருக்கிறது என்று அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அப்படி இருப்பது மிகவும் தவறு. சளி, இருமல் என எது இருந்தாலும், சைனஸ், ஆஸ்துமா, COPD போன்ற ஏதாவது ஒரு பிரச்னையால்தான் வருகிறது.

எப்போதும் சளி, இருமலா? நுரையீரல் அடைப்பு நோயாக இருக்கலாம்... | #World COPD Day 2022

சிலர் எப்போதும் சளி இருக்கிறது என்று அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அப்படி இருப்பது மிகவும் தவறு. சளி, இருமல் என எது இருந்தாலும், சைனஸ், ஆஸ்துமா, COPD போன்ற ஏதாவது ஒரு பிரச்னையால்தான் வருகிறது.

Published:Updated:
நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா ( காவேரி மருத்துவமனை )

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16-ம் தேதி ``COPD (Chronic ObstructivePulmonary Disease)  தினம்"  அதாவது  ``நுரையீரல் அடைப்பு நோய்  தினம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் COPD தினத்தில், ``Your Lungs for Life" என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. 

COPD எனும் ``நுரையீரல் அடைப்பு நோய்" உலகின் மூன்றாவது உயிர்க்கொல்லிநோய்; இது இந்தியாவில் இரண்டாவது உயிர்க்கொல்லி நோய். இந்தியாவில் அதிகபட்சமாக 25 கோடி மக்கள் COPD-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 10,00,000 பேர் COPD-யால் இறக்கின்றனர், மேலும் COPD-யால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்கிறார் காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா. COPD நோய் குறித்த மேலும் பல தகவல்களை அவர் விளக்குகிறார்

சளி, இருமல்
சளி, இருமல்

''COPD என்றால் Chronic Obstructive Pulmonary Disease என்பதைக் குறிக்கிறது. நுரையீரல் என்பது பலூன் போன்றது. COPD நோயால் நுரையீரல் பாதிக்கப்படும்போது, அடைப்பு ஏற்பட்டு நுரையீரலில் இருந்து காற்று வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். மேலும், அல்வியோலர் பைகள் (ஆக்ஸிஜன் பரிமாற்றம் நிகழும் இடம்) சேதமடையும். இயல்பாக, நாம் காற்றை சுவாசிக்கும்போது அங்கே சிறிது முயற்சி தேவைப்படும். ஆனால் காற்றை வெளியேற்றும்போது அது தன்னிச்சையாக நடைபெறுகிறது. COPD-யால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் காற்றை எளிதாக சுவாசித்து, அதை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். மேலும் நுரையீரலில் காற்றை உள்ளிழுப்பது குறைந்து விடும். இதனால் நுரையீரலின் திறன் குறைந்துவிடும். எளிதாகக் கூறவேண்டுமானால், நுரையீரலின் ஆரோக்கிய குறைவே COPD ஆகும். 

புகைபிடித்தல் COPD-க்கு மிக முக்கியமான காரணம். Active smoking மற்றும் Passive smoking என இரண்டுமே COPD-க்கு முக்கிய காரணங்கள் ஆகும். COPD-யால் நுரையீரல் சேதம் ஏற்படுவது என்பது நீங்கள் எவ்வளவு புகைபிடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு 10 சிகரெட் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 1 சிகரெட் ஒரு பேக்-ஆண்டு (PACK-YEAR) என்று அழைக்கப்படுகிறது.10-15 பேக்-ஆண்டுகளுக்கு மேல் புகைபிடித்தால் COPD மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. உலகளவில் 85% COPD புகையிலையால்தான் ஏற்படுகிறது.

நுரையீரல்
நுரையீரல்

இந்தியாவை எடுத்துக்கொண்டால் விறகு அடுப்பு பயன்படுத்துதல், மண்ணெண்ணெய் அடுப்புகள், காற்று மாசுபாடு, காசநோய், நுரையீரல்நோய், கட்டுப்பாடற்ற ஆஸ்துமா போன்ற  காரணங்களும் முக்கியமானவை. குழந்தைகள் முழுதாக வளர்ச்சியடைந்த நுரையீரலுடன் பிறப்பதில்லை. நுரையீரல் தனது முழு வளர்ச்சியை 20 வயதில் தான் அடையும். இப்படி நுரையீரல் வளரும்போது குழந்தைகள் புகையை சுவாசிக்க நேரிட்டால், அல்லது சுவாச தொற்றுகள் மீண்டும் மீண்டும் ஏற்பாட்டல் நுரையீரலின் வளர்ச்சித்திறன் குறைந்து விடும். ஒவ்வொருவருக்கும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நுரையீரல் செயல்பாடு குறைகிறது. வயதாகும்போது அவர்களின் நுரையீரல் செயல்பாடு குறைந்து COPD நோயின் நிலையை அடைகிறது.

தற்போது தலைதூக்கி வரும் காற்று மாசுபாடும் நுரையீரல் பாதிப்பு பயத்தை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நூறு பேரில் நான்கு பேருக்கு காசநோய் இருக்கிறது. ஒருவருக்கு காசநோய் குணமானாலும், அதனால் நுரையீரலில் ஏற்பட்ட சேதம் சரியாகாது. இதுகூட ஒருவருக்கு COPD பாதிப்பை ஏற்படுத்தலாம்.

COPD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், சளி போன்றவை இருந்துகொண்டே இருக்கும். இது நாள்பட அதிகரிக்கும். இடையில் ஏற்படும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சளி போன்றவை COPD-யை மோசமாகிவிடும். நிமோனியா போன்ற நோய் தாக்கும்போது நுரையீரல் செயலிழப்புகூட ஏற்படலாம். சிலர் எப்போதும் சளி இருக்கிறது என்று அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அப்படி இருப்பது மிகவும் தவறு. சளி, இருமல் என எது இருந்தாலும், சைனஸ், ஆஸ்துமா, COPD போன்ற ஏதாவது ஒரு பிரச்னையால்தான் வருகிறது. அதனால் மருத்துவரிடம்  ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியம். 

காசநோய்
காசநோய்

COPD நோயை PFT(Pulmonary function tests), CT ஸ்கேன் போன்ற சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். ஒருவருடைய பாலினம், உயரம், மற்றும் வயதைப் பொறுத்து நுரையீரலின் வளர்ச்சி மற்றும் திறன் இருக்கிறதா என்ற சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையில் காற்று வெளியேற்றும் இடத்தில் அடைப்பு மற்றும் நுரையீரலின் திறன் குறைவாக இருந்தால், அது COPD  என உறுதிசெய்யப்படும். COPD பொறுத்தவரை நுரையீரலின் வளர்ச்சி 65-85% குறையும்போது முதல் நிலை என்றும், 50-65% குறையும்போது இரண்டாம் நிலை என்றும்,35-50% குறையும்போது மூன்றாம் நிலை என்றும், 35% கீழ் குறையும்போது நான்காம் நிலை என்றும்கூறப்படுகிறது.

COPD நோயாளிகளுக்கும் சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. இது சிகிச்சைக்கு வழிகாட்டுவதாகும். 10-15 பேக்-ஆண்டுகளுக்கு மேல் புகைபிடித்தால் அல்லது புகைபிடித்திருந்தால், நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய 55-70 ஆண்டுகளுக்கு இடையில் வருடாந்தர LOW-DOSE மார்பின் சிடி ஸ்கேன் உதவியாக இருக்கும்.

COPD நோயால் பாதிக்கப்பட்டால்,  புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். இன்ஹேலரைப் பயன்படுத்துவது மூச்சுத் திணறலை தடுக்கும் மற்றும் பருவகாலத்தில் உடல்நிலை மோசமடைவதைக் குறைக்கும். இது தவிர, உடற்பயிற்சி (pulmonary rehabilitation), தடுப்பூசி போன்றவையும் இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்குப் பதிலாக மூச்சுக்குழாய்நோக்கி பயன்படுத்தி நுரையீரல் அளவு குறைப்பு (Bronchoscopic LungVolume Reduction, BLVR) செய்யப்படுகிறது.

காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா
காவேரி மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா
காவேரி மருத்துவமனை

COPD-யை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து, அதற்கான காரணத்தை சரி செய்துவிட்டாலே, இந்த நோய்  தீவிரமாவதைத் தடுத்துவிடலாம். ஆனால் COPD என்பது வயதாக வயதாக தான் தெரியவரும் என்பதே கசப்பான உண்மை. புகைபிடிக்காமல் இருப்பது முக்கியம். புகைபிடிப்பவராக இருந்தால் எந்த நிலையிலும் புகைபிடிப்பதை நிறுத்துவது முக்கியம். ஆஸ்துமா மற்றும் காசநோய்க்கு சரியான சிகிச்சை மேற்கொள்வது முக்கியமானது.

காற்று மாசுபாடும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம் என்பதால், இதைத் தடுப்பதற்கான வழியை மக்களுடன் இணைந்து அரசும் எடுக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா.