Published:Updated:

சீனாவில் கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தை! - நெகிழ்ந்த மருத்துவக் குழு

கொரோனா பாதிப்புள்ள தாய்க்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தை
கொரோனா பாதிப்புள்ள தாய்க்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தை ( China Daily/Asia News Network )

கொரோனா பாதிப்புள்ள தாய்க்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தை

எளிதில் நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் பட்டியலில் எப்போதும் கர்ப்பிணிகளுக்கு முதன்மை இடம் உண்டு. அதனாலேயே கர்ப்பகாலத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படச் சொல்லி அறிவுறுத்தப்படுவார்கள் அவர்கள். கொரோனாவிலும் அப்படித்தான். இருப்பினும், கொரோனா தடுப்பு என்பது தற்போதைக்கு சீனாவில் கைக்கு மீறிய நிலையாகவே இருக்கிறது.

குழந்தையுடன், கொரோனா பாதித்த தாய்க்கு சிசேரியன் செய்த மருத்துவக் குழு
குழந்தையுடன், கொரோனா பாதித்த தாய்க்கு சிசேரியன் செய்த மருத்துவக் குழு
China Daily/Asia News Network

அந்த வகையில், வூகான் மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, அவரது கர்ப்பகாலத்தின் 38-வது வாரத்தில் கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. சரியாக, ஜனவரி 30-ம் தேதி அப்பெண்ணுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. உடனே நெஞ்சக நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்து குழுவாக இணைந்து தாயையும் சேயையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

`பதற்றமோ, பீதியோ வேண்டாம்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை!' - அமைச்சர் விஜயபாஸ்கர் #Corona

குழந்தையை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதற்கு, தாமதிக்காமல் அதைத் தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளியில் எடுக்க வேண்டும் என முடிவெடுத்த அந்த மருத்துவக்குழு, சிசேரியன் மூலம் அன்றைய தினமே குழந்தையை வெளியே எடுத்தனர்.

கடந்த மூன்று தினங்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்த குழந்தை, தற்போது 3.05 கிலோகிராம் எடையில், 10 ஆப்கர் ஸ்கோருடன் (Apgar score) முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஹர்பின் நகராட்சி சுகாதார ஆணையத்தின் சார்பில் இன்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த தாய்க்கு சிசேரியன் செய்த மருத்துவக் குழு
கொரோனா பாதித்த தாய்க்கு சிசேரியன் செய்த மருத்துவக் குழு
China Daily/Asia News Network

குழந்தைக்கு, கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவல். தாய்க்கு, அடுத்தகட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். சிசேரியனை மேற்கொண்ட மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனாவுக்கான தாக்கம் இருக்கிறதா எனப் பரிசோதிக்க, அவர்கள் அனைவரும் தற்போது ஐஸோலேஷன் வார்டில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சப்போர்டிவ் கேர் :
கொரோனா உறுதிசெய்யப்பட்ட பின் தெரியவரும் அறிகுறிகளுக்கு ஏற்ப, அவற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

`கொரோனாவுக்கான சிகிச்சை இதுதான்' என்பது எங்கும் கண்டறியப்படவில்லை என்பதால், தாய் முழுமையாகக் குணமடைவாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், இப்போதுவரை கொரோனாவுக்கு `சப்போர்ட்டிவ் கேர்' எனப்படும் ஆதரவு மருந்துகள் தொடர்ச்சியாகத் தரப்பட்டு வருகின்றன. கொரோனா உறுதிசெய்யப்பட்ட பின் தெரியவரும் அறிகுறிகளுக்கு ஏற்ப, அவற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுதான் `சப்போர்டிவ் கேர்' எனப்படும். அறிகுறிகள் சரியாகிவிடும் பட்சத்தில், பிரச்னையும் (கொரோனாவும்) சரிசெய்யப்பட்டுவிடும். இப்படியாக இதுவரையில் 503 பேர் குணப்படுத்தப்பட்டிருப்பதாக, தரவொன்று தெரிவிக்கிறது.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்
பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

இதன் காரணமாகத்தான், `அறிகுறிகள் தெரியவந்தவுடன் தாமதமின்றி மருத்துவ உதவியைப் பெறத் தொடங்குங்கள்' என மருத்துவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்ட தாய்க்கும் இந்த சப்போர்ட்டிவ் கேர் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரும் விரைவில் நலம் பெறுவார் என நம்புவோம்!

அடுத்த கட்டுரைக்கு