Published:Updated:

`கொரோனாவே ஓடிப் போ... ஓடிப் போ!' - வைரலாகும் கொரோனா எதிர்ப்புப் பாடல் #Viral

Corona Viral Song
Corona Viral Song ( www.facebook.com/sushil.mittal )

`கொரோனாவை எதிர்க்கும் கீதம் இது' எனத் தலைப்பிட்டு, நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்துவருகிறார்கள்.

கொரோனா வராமல் தடுக்க, கைகுலுக்குதல், அணைத்தல் வேண்டாம் என்று வணக்கத்துக்கு மாறினோம். சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள், கொரோனா இந்தியாவைவிட்டு செல்லும் வரை நமஸ்தே சொல்வோம் என்று சமூக வலைதளங்கள் வழி பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அது பெரிய அளவில் வைரலானது.

தற்போது, 'கொரோனா வைரஸே எங்கள் நாட்டை விட்டு போ' என்ற பாடல் ஒன்று வைரலாகிக்கொண்டிருக்கிறது. சுஷில் மிட்டல் என்பவர் இந்த வீடியோவைத் தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார். வியூஸ், கமென்ட், ஷேர்ஸ் என்று சோஷியல் மீடியாவை கலக்கிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த 20 பெண்கள், கைகளைத் தட்டியபடி தங்கள் மொழியில் 'கொரோனாவே ஓடிப் போ ஓடிப் போ', 'எங்கள் இந்தியாவில் உனக்கு எந்த வேலையும் இல்லை' என்று பாடுகிறார்கள்.

`வுகானில் கொரோனா நோயாளியுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்த மருத்துவர்!' - நெகிழும் நெட்டிசன்கள் #Viral

தங்கள் பாடல் மூலம் கொரோனாவை விரட்ட முயற்சிசெய்யும் இந்தப் பெண்களின் செயலை, 'ஹா ஹா' ஸ்மைலியைப் போட்டு சிலர் கேலி செய்ய, 'கொரோனாவை எதிர்க்கும் கீதம் இது' தலைப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்துவருகிறார்கள்.

Corona Virus Anthem
Corona Virus Anthem
www.facebook.com/sushil.mittal
`கொரோனா பாதிப்பு; லீவ் வேண்டும்!' -தலைமை ஆசிரியைக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை மாணவர் #Viral

கொரோனா இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கிற இந்த நேரத்தில், இந்தப் பெண்களுடைய பாடல் நேர்மறை உணர்வை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அடுத்த கட்டுரைக்கு