Published:Updated:

`12 பேருக்கு நெகட்டிவ்; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை!' - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா அலர்ட்
கொரோனா அலர்ட்

`7,842 பயணிகளுக்கு கொரோனா ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது!' அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி!

கேரளாவில் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் யாருக்கேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

``இதுவரை தமிழகத்திலிருந்து கொரோனா பாதிப்புக்காக 12 ரத்த மாதிரிகள் பெறப்பட்டு, சென்னை கிண்டியிலுள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. முடிவில், அனைவருக்குமே கொரோனா நெகட்டிவ்வாகத்தான் வந்துள்ளது.

``கொரோனா வைரஸ் ஒரு பயோ வார் கிடையாது..!" அடித்துக் கூறும் ஆய்வாளர்கள்

இன்று, நான்கு புதிய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 13 பேரை மருத்துவ கண்காணிப்பில் அனுமதித்திருக்கிறோம்.

கொரோனா சிறப்பு மையம்
கொரோனா சிறப்பு மையம்

தற்போதைக்கு, அனைத்து மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கான ஐஸோலேஷன் வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களோடு இணைந்து, கிராமப்புறங்களிலும் அங்கிருக்கும் பள்ளிகளிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் வழியாகத் தடுப்பு முறைகள், அறிகுறிகளை எல்லாம் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லிவருகிறோம்.

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு சார்பில் இ-விசா நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, வரும் நாள்களில் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கலாம். தமிழக அளவில், இதுவரை 7,842 பயணிகளுக்கு ஸ்க்ரீனிங் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வதந்தி பரப்பிய மூன்று பேர் கைது... கேரள சுகாதாரத்துறை அதிரடி!

அதில், கேரளாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் இணைந்து பயணித்துவந்த பயணியும் ஒருவர். பரிசோதிக்கப்பட்ட யாருக்குமே கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். குறிப்பிட்ட அந்த ஒரு நபர், தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்" என்றார்.

பின் செல்ல