Published:Updated:

`கைகளை மட்டுமல்ல கைப்பேசிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்!' #CoronaAlert

கொரோனா
கொரோனா

கையைப் போன்றே நம்முடன் 24 மணி நேரமும் இருக்கும் ஒரு பொருள், செல்போன். கழிவறைக்குச் செல்லும்போதுகூட அதைக் கொண்டு செல்கிறோம்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா, இப்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. கொரோனா வைரஸைவிட, அதைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளே மக்களை அதிகம் பயப்படச் செய்கின்றன. கொரோனா வைரஸ், நம் கைகளிலிருந்துதான் பரவுகிறது. அதனால் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் கூறிவருகின்றனர். கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது, சானிடைஸர் (sanitizer) எடுத்துச்செல்ல வேண்டும், தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுதல் அவசியம்.

corona
corona

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. எனவே, கொரோனா தொற்றுடையவரைத் தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். அவர்கள் உபயோகப்படுத்திய பொருள்களையும் தொடாமல் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்புடையவர், தன்னைத் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவக்கூடும் என கொரோனா தொடர்பான பல செய்திகளை நாம் கடந்துவருகிறோம். 'ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிட்டல் இன்ஃபெக்‌ஷன்' இதழின் சமீபத்திய ஆய்வு, கொரோனா வைரஸால் கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் ஒன்பது நாள்களுக்கு மேல் வாழ முடியும் என்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனால், கையைப் போன்றே நம்முடன் 24 மணி நேரமும் இருக்கும் ஒரு பொருள் செல்போன். கழிவறைக்குச் செல்லும்போதுகூட அதைக் கொண்டு செல்கிறோம்.

Smartphone
Smartphone

கைகளின் சுத்தம் பற்றி யோசிக்கும் நாம், செல்போன்களை சுத்தமாக வைத்துக்கொள்வதைப் பற்றி யோசிப்பதே இல்லை. 2012-ம் ஆண்டிலேயே அரிஸோனா பல்கலைக்கழகம் (The University of Arizona), கழிப்பறை இருக்கையைவிட 10 மடங்கு அதிக பாக்டீரியா, செல்போன்களில் இருப்பதைக் கண்டறிந்து சொன்னது. எனவே, செல்போன்களை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

செல்போன்களை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம் பற்றி நம்மிடம் பேசுகிறார், பொது மருத்துவர் சிவராம கண்ணன். ``கைகளில் இருந்துதான் கொரோனா தொற்று தொடங்குகிறது. அதனால்தான் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். நாம் அதிகம் உபயோகப்படுத்துவது செல்போன், கழிப்பறைக்குச் சென்றால்கூட எடுத்துச்செல்கிறோம். எப்போதும் எங்கேயும் நம்முடன் இருக்கும் செல்போனில் அதிக பாக்டீரியா இருக்கக்கூடும். கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதைப் போலவே செல்போன்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Corona
Corona
`கொரோனா பாதிப்பு; லீவ் வேண்டும்!' -தலைமை ஆசிரியைக்கு அதிர்ச்சிகொடுத்த சென்னை மாணவர் #Viral

செல்போனையும் அதன் மேல் உறையையும் தினமும் ஐந்து நிமிடங்களுக்கு காலை 11 மணிக்கு மேல் வரக்கூடிய வெயிலில் வைத்திருப்பது நல்லது. டிஸ்இன்ஃபெக்டன்ட் ஸ்பிரே (disinfectant spray) கடைகளில் கிடைக்கும். அதை ஒரு துணியிலோ அல்லது டிஷ்யூ (tissue) தாளிலோ தெளித்து, செல்போன்களைத் தினம் ஒரு முறை துடைக்கலாம். மேலும், வெளியே செல்லும்போது செல்போன்களை பொது இடத்தில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்"என்கிறார், சிவராம கண்ணன்.

அடுத்த கட்டுரைக்கு