Published:Updated:

`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்!’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck

கொரோனா ( Freepik )

கொரோனா பற்றி வெளியான தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். வாட்ஸப்பில் வந்த தகவல்கள் உண்மையா எனத் துறைசார்ந்த நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்!’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck

கொரோனா பற்றி வெளியான தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். வாட்ஸப்பில் வந்த தகவல்கள் உண்மையா எனத் துறைசார்ந்த நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

Published:Updated:
கொரோனா ( Freepik )

கொரோனா வைரஸ் உலகின் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. சீனா தொடங்கி இத்தாலி, இரான், அமெரிக்கா எனப் பாதிப்புகள் பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவிலும் பாதிப்புகள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நாள்களில் மக்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கலாம் என்கிறார்கள். இதையே நேற்றைய உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ``சுய தனிமைப்படுத்தலே கொரோனாவை எதிர்க்கும் மிகப்பெரிய ஆயுதம்’’ என்று குறிப்பிட்டார்.

Vikatan Fact Check
Vikatan Fact Check

`பெருந்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு உலக அளவில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இந்தச் சூழலில், அவற்றில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மையை சோதித்த பின்னரே அதை மற்றவர்களுக்குப் பகிர்தல் ஒவ்வொருவரின் கடமை. இதுபோன்ற நெருக்கடி காலங்களில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அப்படி கொரோனா பற்றி வெளியான தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். வாட்ஸப்பில் வந்த தகவல்கள் உண்மையா எனத் துறைசார்ந்த நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எல்லா தொண்டை வலியும் கொரோனா இல்லை. ஆனால், இந்த நேரத்தில் தொண்டை வலி வராமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது.
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

அப்படி வாட்ஸப்பில் உலா வரும் இரண்டு தகவல்கள் எடுத்துக்கொண்டோம். இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

முதலாவது தகவல், ``கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே. கொரோனா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படித் தெரிந்து கொள்வது... ரொம்ப சிம்பிள். நீள பெருமூச்சை இழுத்து 10-லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும். அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால், உங்களுக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாகச் சோதித்து பார்ப்பது நல்லது’’ என்று ஒரு தகவல் வாட்ஸ் அப் குரூப்களில் வலம் வருகிறது.
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

இதுகுறித்து பேசிய மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், ``இந்த வதந்தி இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பரவிக்கொண்டிருப்பது. பல மொழிகளில் இந்த வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதில் துளியளவில் கூட உண்மையில்லை. கொரோனா ஸ்டீல், பிளாஸ்டிக் என ஒவ்வொரு பொருள்களில் எத்தனை நாள்கள் கொரோனா வைரஸ் உயிர்வாழ முடியும் என்பது குறித்த அறிவியல்பூர்வமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அறிவியல்பூர்வமாக விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும், இப்படி வதந்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தகவல்களைத் தயவுசெய்து யாரும் பரப்பாதீர்கள். இப்படி வதந்தி பரப்புவோர், யாராக இருந்தாலும் கைது செய்வதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10 முதல் 12 விநாடிகள் மூச்சை நிறுத்துவதற்கும் கொரோனாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அதேபோல், தொண்டையில் வலி என்பது பாக்டீரியா தொற்றால்கூட ஏற்பட்டிருக்கலாம். கொரோனாவால்தான் என்றில்லை, வேறுகாரணங்களால்கூட தொண்டையில் வலி ஏற்படலாம். ஆனால், இந்த நேரத்தில் தொண்டையில் வலி வராமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனென்றால், குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

அடிக்கடி ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நலம். அதேபோல், சுத்தமான நீரை பருகுங்கள். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பாக்டீரியா தொற்று காரணமாகத் தொண்டை வலி ஏற்பட்டால் கூட, அது நமக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தொண்டை வலி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு முறை பல்துலக்குங்கள். மூன்று முறை உணவு எடுத்துக்கொண்ட பின்னர் வாய் கொப்பளித்துவிடுங்கள். எல்லா தொண்டை வலியும் கொரோனா இல்லை. ஆனால், இந்த நேரத்தில் தொண்டை வலி வராமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது’’ என்றார்.

அதேபோல், ``27 டிகிரி செல்சியஸுக்கு மேல் இந்த வைரஸ் தாங்காது. எனவே, இந்தியா மாதிரி வெப்பமண்டல நாடுகளில் இது தாக்குப்பிடிப்பது அரிதிலும் அரிது. இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் லிஸ்ட்டை பாருங்கள். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதுவும் flight-யில் AC, ஏர்போர்ட்டில் centralized AC, அப்புறமாய் AC கார், ஹோட்டலில் AC என்று குளிரில் வாழ்பவர்களையே இது தாக்குகிறது’’ என்று ஒரு தகவலையும் வாட்ஸ் அப் குரூப்களில் காணமுடிகிறது. இது உண்மையா என மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், ``நம்முடைய உடல் வெப்பநிலையே 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. வெளியில் 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம். உடலுக்குள் வெப்பநிலை இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்படி அந்த வெப்பநிலையிலேயே கொரோனா வைரஸ் உயிர்வாழும் நிலையில், இந்த வெப்பநிலையில் ஏன் உயிர்வாழாது? 56 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் இருந்தால்தான் கொரோனா போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொரோனா வைரஸ் வாழும் காலம்
கொரோனா வைரஸ் வாழும் காலம்

மேலும், இந்தியாவைப் போன்றே வெப்பநிலையை உடைய சிங்கப்பூர், இரான் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகம் இருப்பதை நாம் பார்க்கிறோம். அப்படியென்றால், இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல், எப்போதுமே ஏ.சியிலேயே எல்லாரும் இருப்பது கிடையாது. ஏ.சியை விட்டு வெளியில் வருகிறோம். நம்முடைய வெப்பநிலையில், இது உயிர்வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். குறைந்த வெப்பநிலையில் மட்டுமே இது உயிர்வாழும் என்று சொல்ல முடியாது. ஆனால், குறைந்த வெப்பநிலையில், இது நிலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism