Published:Updated:

`தடுப்பூசி... 3 மணிநேரம்; நாசா செயற்கைக்கோள்!’ - #Corona வதந்திகளும் விசாரித்த உண்மைகளும் #FactCheck

கொரோனா

கொரோனா பற்றி வெளியான தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். வாட்ஸ்அப்பில் வந்த தகவல்கள் உண்மையா எனத் துறைசார்ந்த நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

`தடுப்பூசி... 3 மணிநேரம்; நாசா செயற்கைக்கோள்!’ - #Corona வதந்திகளும் விசாரித்த உண்மைகளும் #FactCheck

கொரோனா பற்றி வெளியான தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். வாட்ஸ்அப்பில் வந்த தகவல்கள் உண்மையா எனத் துறைசார்ந்த நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

Published:Updated:
கொரோனா

பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸால் உலக அளவில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் 4,71,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன. அதேநேரம், இந்த பெருந்தொற்றுக்கு இதுவரை 21,287 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Vikatan Fact Check
Vikatan Fact Check

இந்தியாவில் இதன் தாக்கம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவரை 649 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனாவை எதிர்கொள்ள `சுய தனிமைப்படுத்துதல், சோஷியல் டிஸ்டன்ஸிங்’ அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் வேளையில், நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் பேசுபொருளாக இருக்கும் கொரோனாதான் சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக். கொரோனா குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் சூழலில், அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் போலியான\பொய்யான தகவல்கள் பாதிப்புகளின் வீரியத்தை அதிகரிக்கக் கூடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய களமிறங்கினோம். அதன்படி, இரண்டு தகவல்களை நாம் எடுத்துக்கொண்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முதலாவது தகவல், ``கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் ரோச் மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள `COVID - 19 lgm/lgh’ என்று மருந்தை எடுத்துக்கொண்டால் 3 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் குணமாகிவிடலாம்.’’

இதுகுறித்து மருத்துவரும் தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.பி-யுமான செந்திலிடம் பேசினோம். ``இந்தச் செய்தியிலேயே மிகப்பெரிய தவறு இருக்கிறது. தடுப்பூசி என்பது நோயாளிகளுக்குப் போடப்படுவதல்ல. தடுப்பூசி என்பது நோய் வராமல் முன்னெச்சரிக்கையாகப் போடப்படுவது. இந்த தடுப்பூசியைப் போட்டால் 3 மணி நேரத்தில் குணமாகிவிடலாம் என்று சொல்வதில் துளியளவும் உண்மையில்லை. இதைப்பற்றி பல்வேறு வதந்திகள் இருந்தாலும், கொரோனா தடுப்பூசியைப் பற்றி தீவிரமாக மனிதகுலம் ஏன் சிந்திக்கவில்லை என்றால், அது நடந்துகொண்டிருக்கிறது.

மருத்துவர் செந்தில்
மருத்துவர் செந்தில்

சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒரு விஷயத்தைச் சொன்னார்.`எனக்கு இப்போது 63 வயதாகிறது. இதற்கு முன்னால் 64 ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டது. 64 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது சமூகத்துக்கே சிக்குன்குனியா நோய் எதிர்ப்பு (Community Immunity) வந்தது’’ என்றார். போலியோ தடுப்பு மருந்து பற்றி அனைவருக்கும் தெரியும். அந்தத் தடுப்பு மருந்தை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனச் சொல்வதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கும்போது இந்த சமூகத்துக்கே நோய் எதிர்ப்பு ஏற்பட்டு விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனாவைப் பொறுத்தவரை, 60 சதவிகிதம் மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள். அதில், 80 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அவர்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். அவர்களால், இந்த சமூகத்துக்கே நோய் எதிர்ப்பு வரும். இப்படித்தான் கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வரிகளுக்குள் வாசிக்க வேண்டும் (Reading between the lines) என்பார்கள். இந்தத் தகவல் பொய் என்பதற்கு அதில் இருக்கும் ஒரு வரியே போதுமானது. `இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் நோய் குணமாகும்’ என்பது அடிப்படையிலேயே தவறு’’ என்றார்.

ஊரடங்கு (கோவை)
ஊரடங்கு (கோவை)
இரண்டாவது தகவல், ``மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தியா முழுவதும் மக்கள் கைதட்டிய ஓசை எதிரொலித்தது. இந்த ஒலி அலைகளால் உருவான காஸ்மிக் கதிர்கள் நாசாவின் SD13 செயற்கைக்கோள் மூலம் உணரப்பட்டது. இதனால், இந்தியாவில் COVID-19 virus தாக்கல் குறைந்துவருவதை சமீபத்தில் உருவாக்கப்பட்ட பயோ-செயற்கைக் கோள் ஒன்று கண்டுபிடித்துள்ளது’’ என்பது.

கடந்த 19-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ``கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22-ம் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அதேபோல், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து கொரோனா தடுப்பில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு கைகளைத் தட்டி ஒலி எழுப்புவதன்மூலம் பாராட்டு தெரிவிக்கலாம்’’ என்றும் பிரதமர், தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த வேண்டுகோளை மையப்படுத்தியே மேற்கூறிய வதந்தி வேகமாகப் பரவத் தொடங்கியது.

உண்மையில், சமூக வலைதளங்களில் வலம்வருவது போன்ற ஒரு தகவலை நாசா தனது ட்விட்டர் பக்கத்திலோ அல்லது இணையதளத்திலோ என எங்கும் வெளியிடவில்லை. அதேபோல், மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு எழுப்பப்பட்ட கைதட்டல் ஒலி, கொரோனா வைரஸ் அல்லது அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என எதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து எந்தவொரு தகவலையும் நாசா கூறவில்லை என்பதே உண்மை. அதேபோல், பயோ- செயற்கைக்கோள் என்பது வைரஸ் பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.

நாசா
நாசா

அது ஒரு நுண்ணுயிர் போன்றது; பூமிக்கு வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எந்தவொரு செயற்கைக் கோள் மூலமும் அதை டிராக் செய்ய முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேநேரம், விண்வெளிப் பயணங்களால் நமது உயிரியல் அமைப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றத்தை அளவிடக் கூடியவை இந்த பயோ-செயற்கைக் கோள்கள். எனவே, நாசா சொன்னதாக வெளியான அந்தத் தகவல் போலியானது. இதுபோன்ற பொய்யான\போலியான தகவல்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை நம்பி மக்கள் நடமாடத் தொடங்கினால், வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism