Published:Updated:

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்... பெய்ஜிங் நிலை என்ன?!

சீனா
சீனா

பெய்ஜிங்கின் சின்ஃபாடி சந்தையில் மீண்டும் பரவிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலிருந்து உணவுப்பொருள்கள் மூலமாகவோ, பயணிகள் மூலமாகவோ வந்திருக்கலாம் என்கிறார் ஜான்கியு.

சீனாவில் புதிதாக எந்த கோவிட்-19 கேஸ்களும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு 56 நாள்களுக்குப் பின் பெய்ஜிங்கில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது கொரோனா. கோவிட்- 19 பரவலைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை அதிவிரைவாக உடனுக்குடன் எடுக்கும் நிலை, தற்போது அங்கு ஏற்பட்டுள்ளது.

Corona
Corona
pixabay

கொரோனா வைரஸின் பிறப்பிடம் எனக் கூறப்படும் வுகானைவிட பெய்ஜிங்கில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால், தலைநகருக்கு வெளியே செல்லும் அவசியமற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, பெய்ஜிங்கின் சின்ஃபாடி (Xinfadi) மொத்தச் சந்தைக்கு வந்திருந்த மக்களை அதிகாரிகள் பரிசோதித்ததில்தான், பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று விரைவாகப் பரவிவருவது கண்டறியப்பட்டது. நான்கே நாள்களில் பெய்ஜிங்கில் புதிதாக 79 கோவிட் 19 கேஸ்கள் உறுதிசெய்யப்பட்டன. அதையடுத்து, இது வுகானில் பரவிய கொரோனா தொற்றுப் பரவலைவிட அதிகரிக்கலாம் என வுகான் பல்கலைக்கழகத்தின் நோய்க்கிருமி உயிரியல் துறையின் துணை இயக்குநர் யாங் ஜான்கியு கூறியிருக்கிறார்.

கொரோனா சமூகப் பரவல்
கொரோனா சமூகப் பரவல்

பெய்ஜிங்கின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளர், `சின்ஃபாடி மொத்தச் சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மரபணு வரிசை முறையை (genome sequencing) ஆராய்ந்ததில் அது ஐரோப்பாவில் தோன்றியுள்ளதைக் குறிக்கிறது' என்றிருக்கிறார். 'அதனால் வேறு நாட்டில் இருந்துதான் இம்முறை பரவியிருக்க வேண்டும்' என்கிறார் ஜான்கியு.

`குஞ்சு பொரிக்கப்பட்ட 10 பாம்பு முட்டைகள்!' -கேரளப் பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்

பெய்ஜிங்கின் சின்ஃபாடி சந்தையில் மீண்டும் பரவிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலிருந்து உணவுப்பொருள்கள் மூலமாகவோ, பயணிகள் மூலமாகவோ வந்திருக்கலாம் என்கிறார் ஜான்கியு. பெய்ஜிங் சின்ஃபாடி சந்தையில் சமீபத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றுப் பரவல் 'இரண்டாவது அலை' என்பதை அவர் மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

corona virus
corona virus

'வுகானில் முதன்முறை கொரோனா தொற்றுப் பரவ முக்கியக் காரணம் குளிர்காலம்தான். ஆனால், பெய்ஜிங்கில் இப்போது கோடைக்காலம் என்பதால் முன்புபோலத் தொற்று அதிகம் பரவாது' எனக் கூறியிருக்கிறார் ஜான்கியு. கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கிய ஆரம்பகாலகட்டத்தில், இந்தியாவிலும் இதுவே சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு