Published:Updated:

குழந்தைகளிடம் குறைவாகக் காணப்படும் கொரோனா அறிகுறிகள்... அமெரிக்க ஆய்வு முடிவு!

கொரோனா
கொரோனா

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களில் 1,48,082 பேரின் வயதுப் பட்டியலின் அடிப்படையில் 1.7% குழந்தைகள் என்று தெரியவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு முடிவுகள், குழந்தைகள் மீது கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து விளக்கியுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள், கொரோனா தொற்று சீனாவில் தீவிரமாக இருந்தபோது அங்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன.

Corona in Kids
Corona in Kids

ஆய்வின் முடிவில், இருமல், சளி, கடுமையான சுவாசக் கோளாறுகள் எனக் கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் பெரியவர்களிடம் தென்படும் விகிதத்தைவிட, குழந்தைகளிடம் குறைவாகக் காணப்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெரியவர்களுக்கு கொரோனா வைரஸை கடத்தக்கூடியவர்களாகவும் குழந்தைகள் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 22% 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களில் 1,48,082 பேரின் வயதுப் பட்டியலின் அடிப்படையில் 1.7% குழந்தைகள் என்று தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 2% குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

Corona
Corona

மேலும், குழந்தைகளிடம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் குறைவாக இருப்பது பற்றிய ஆராய்ச்சியில், சுகாதார அமைப்புகள் பரிந்துரைத்துள்ள அறிகுறிகளுடன், வேறு சில அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், கொரோனா தொற்றுக்கான அறிகுறியான காய்ச்சல் 56% பேரிடம் மட்டுமே இருந்துள்ளது. ஆனால், பெரியவர்களில் 71% பேருக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. மற்றொரு அறிகுறியான இருமல், குழந்தைகளில் 54% பேருக்கும் பெரியவர்களில் 80% பேருக்கும் இருந்துள்ளது. கொரோனாவுக்கான முக்கிய அறிகுறியான மூச்சுத்திணறல், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 13% பேருக்கும் 65 வயதுக்கு உட்பட்டவர்களில் 43% பேருக்கும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baby
Baby
ட்ரம்ப் `கேம்-சேஞ்சர்' என்று குறிப்பிட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உண்மையில் எந்த நோய்க்கான மருந்து? - ஓர் அலசல்

கொரோனாவுக்கான இன்னும் பிற அறிகுறிகளான தசை வலி, தொண்டைப் புண் , தலைவலி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் குழந்தைகளிடம் குறைவாகவே தென்பட்டுள்ளன. நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு குழந்தைக்கு எந்தவித அறிகுறிகளும் இருந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு