Published:Updated:

அசுத்தமான பொருள்களையோ விலங்குகளையோ தொடுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு!

Representational Image
Representational Image

கொரோனா தொற்றுப் பரவல் பயத்தில் அத்தியாவசியப் பொருள்களையே நீண்ட யோசனைக்குப் பின்னரே வாங்கும் நிலை தொடர்ந்துவருகிறது.

சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் குறைவாக இருக்க, நோய் குறித்த பீதியோ உச்சத்தில் இருந்தது. இப்போதோ, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. நோய்ப்பரவல் அதிகரித்து, நோய் குறித்த பயம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. ஊரடங்கும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவர மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது போன்ற பிம்பத்தை இது உருவாக்கியுள்ளது.

corona spread
corona spread

கொரோனா நோய் தொற்று குறித்த அலட்சியத்தை எச்சரிப்பது போல அமைந்துள்ளது CDC-ன் (Centers for Disease Control and Prevention) 'How COVID-19 spreads' வலைத்தளம் கூறியிருப்பது.

அசுத்தமான பொருள்களை தொடுவதாலோ, விலங்குகளைத் தொடுவதாலோ கொரோனா தொற்று பரவும் வாய்ப்பைவிட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும் என அழுத்தமாகக் கூறுகிறது CDC. வைரஸ்கள் அட்டைகளில் (cardboard) இருக்கும்போது 24 மணிநேரம் வரையிலும், உலோக மேற்பரப்பில் மூன்று நாள்கள்வரையிலும் தாக்குப்பிடிக்கின்றன எனவும் மன்ஸ்டர் என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வகச் சோதனையில் தெரியவந்துள்ளது.

handling pet animals
handling pet animals

கொரோனா தொற்று பரவல் பயத்தில் அத்தியாவசியப் பொருள்களையே நீண்ட யோசனைக்குப் பின்னரே வாங்கும் நிலை தொடர்ந்துவருகிறது. உண்மை என்னவென்றால், இவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு மிகக்குறைவு. நெருங்கிய தொடர்பில் இருக்கும்பட்சத்தில்,பேசும்போதோ இருமும்போதோ தும்மும்போதோ வெளிவரும் எச்சில் சிதறல்களால் ஒருவருக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும்.

கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், அதற்கான அறிகுறிகள் நிச்சயம் அவருக்கு ஏற்படும் என்றில்லை. உரையாடும்போது 6 அடி தொலைவு இடைவெளியைப் பின்பற்றுவது தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், இந்த இடைவெளியே நெருங்கிய தொடர்புதான் எனச் சுட்டிக்காட்டுகிறது CDC தகவல்.

நர்சிங் ஹோம்கள், சிறைச்சாலைகள், பயணக் கப்பல்கள் மற்றும் இறைச்சி பேக்கிங் ஆலைகள் என அதிக நபர்கள் பணிபுரியும் இடங்களில் கொரோனா தொற்று மிக அதிகமாகப் பரவியிருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

Corona spread
Corona spread
`வழுக்கைத்தலை உள்ளவர்களை கொரோனா தாக்க அதிக வாய்ப்பா?' - ஆய்வு முடிவும் மருத்துவர் விளக்கமும்

மார்ச் மாதத்தில், வாஷிங்டனில் உள்ள சர்ச் ஒன்றில், தொற்று ஏற்பட்ட ஒருவர் மூலம் ஒரே நாளில் 52 பேருக்கு நேரடியாகப் பரவியது இதற்கு மற்றுமொரு சான்று.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கல்வி நிறுவனங்கள் முதல் பணியிடங்கள் வரை வீட்டிலேயே இருந்து தங்கள் வேலைகளைச் செய்துகொள்ளலாம் எனப் பாதிக்கப்பட்ட பல நாடுகள் அறிவித்ததே கொரோனா தொற்று ஓரளவுக்காவது கட்டுக்குள் இருந்துவந்ததற்கான முக்கியக் காரணம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்நிலையில் ஊரடங்கில் இன்னும் தளர்வுகள் அதிகரிப்பது நல்லதல்ல என்பதையே உணர்த்துகிறது CDC.

அடுத்த கட்டுரைக்கு