Published:Updated:

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! #FightCovid-19

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( pixabay )

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ் முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக இல்லை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19 கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...? நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது எப்படி? என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம் பேசினோம்.

`மனிதர்களிடம் சோதிக்கப்படாதது; 14 மாத ஃபாலோ அப்!'- #Corona தடுப்பூசி சோதனையில் கலந்துகொண்ட முதல்நபர்

"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால் கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழலாம். எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே எளிதில் தாக்கும்.

முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.

இதற்கு வயதானவர்களின் உணவு முறை, அவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மற்ற உடல் கோளாறுகளும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு வகை மருந்துகளும் முக்கியக் காரணங்கள். எனவே எந்தவொரு வைரஸ், பாக்டீரியாவாக இருந்தாலும் அவை இளைஞர்களைவிட முதியவர்களைத்தான் எளிதில் தாக்குகின்றன.

corona
corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ் முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக இல்லை.

தற்போது உயிரிழந்த மூவரும் வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல், சிறுநீரகப் பிரச்னை போன்ற ஏதாவது குறைபாடுகள் இருந்திருக்கலாம்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

அதனுடன் கொரோனா தொற்றும் சேர்ந்தபோது அது உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு முதியவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். பொதுவாக நோய் வந்தபிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதைவிட அது வராமல் தடுக்க நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே சிறந்தவை.

`கொரோனாவைத் தீவிரப்படுத்தும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மருந்துகள்!'- எச்சரிக்கும் மருத்துவர்

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது என்பதால் மற்றவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது.

அதிகம் கூட்டம் கூடும் இடங்களான பார்க், கடைத்தெரு, திருமண விழாக்கள், கோயில்கள் போன்றவற்றிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வெளியில் செல்வதையே தவிர்ப்பது சிறந்தது.

ஹேண்ட் வாஷ்
ஹேண்ட் வாஷ்

அடிப்படை சுகாதார தற்காப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் பயன்படுத்தலாம். கைகளை சோப் அல்லது ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தூய்மையான முறையில் நன்றாக வேகவைக்கப்பட்டுச் சமைத்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர்
தண்ணீர்

குளிர்ந்த நீரை விடக் கொதிக்க வைத்த நீரையே பருக வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.

சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

`தும்மல் கொரோனாவின் அறிகுறியா?!' - சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்

கொரோனா தொற்று அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து வயதானவர்கள் விலகியே இருக்க வேண்டும்.

வீட்டில் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெளியில் செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் செல்லலாம்.

சிகிச்சை
சிகிச்சை

குளுமையான இடங்களில் வைரஸ் எளிதாகப் பரவும் என்பதால் வெதுவெதுப்பான இடங்களில் இருக்க வேண்டும்.

ஒருவேளை காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும்.

கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவமனையில் சேர்ந்து முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்" என்றார் மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

அடுத்த கட்டுரைக்கு