Published:Updated:

`இந்தியாவில் 2019 நவம்பரிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு?' - விஞ்ஞானிகள் ஆய்வு

corona
corona

தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டின் வைரஸ் மாதிரிகள் கிளாட் A3i மாதிரியை ஒத்துள்ளன. ஆய்வில் பயன்படுத்திய பெரும்பாலான மாதிரிகள் இந்தியாவில் வைரஸ் வெடிப்புத் தொடங்கிய நாள்களிலிருந்து கேகரிக்கப்பட்டவை.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கியதாக அறியப்படும் கோவிட்-19 கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம் தேதி அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டது. சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மாணவி, கேரளாவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய பிறகு, அவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

corona
corona

அவர் மூலமாக, இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் பதிவாகி இருந்தாலும், 2019 நவம்பர் மாதத்துக்கு முன்னரே, இந்தியாவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் மரபணு வரிசை காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள செல்லுலார் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான ஆய்வு மையம் (CCMB), டெல்லியில் அமைந்துள்ள ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம்(CSIR-IGIB) மற்றும் காசியாபாத்தில் அமைந்துள்ள அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன.

corona
corona

ஆய்வின் முடிவில், இந்தியாவில் முதன்முதலாக கோவிட்-19 கொரோனா வைரஸ் ஜனவரியில் அதிகாரபூர்வமாகப் பதிவாகியிருந்தாலும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பே, இந்த வைரஸ் இந்தியாவில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. tMRCA (time to most recent common ancestor) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், கோவிட்-19 கொரோனா வைரஸின் மிக சமீபத்திய முந்தைய மரபணு வரிசையைக் கண்டறியும் வகையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டி உதைக்கப்பட்ட பைக்; கெத்துகாட்டிய லோடுமேன்! -சமாதானத்துக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாநிலங்களான தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டின் தொற்றாளார்களிடம் தொற்றியுள்ள வைரஸில், ஒரு தனித்துவமான அடையாளத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தனித்துவமான மரபணு வரிசைகளைக்கொண்டு பெருக்கமடைந்துள்ள வைரஸ் இந்தியாவில் காணப்படும் கோவிட்-19 வைரஸின் மரபணு வரிசைகளோடு 41% ஒத்துப்போகிறது. இந்த உயிரினக் கிளைக்கு (clade) விஞ்ஞானிகள் A3i எனப் பெயரிட்டுள்ளனர்.

Corona Virus
Corona Virus

மேலும், ஆராய்ச்சியாளர்கள் 64 கோவிட்-19 மரபணு வரிசைகளை வரிசைப்படுத்திப் பகுப்பாய்வு செய்ததில், இதுவரை அறியப்படாத மரபணு வரிசையைக் கொண்ட வைரஸாக இருக்கும் A3i உயிரினக்கிளை, இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் மரபணு அமைப்பையே கொண்டுள்ளதாகவும், உலகளாவிய அளவில் சமர்ப்பிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளில் 3.5 சதவிகிதமே ஒத்துப்போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

`துரைமுருகன் ஆசீர்வாதம்.. 25 லட்ச ரூபாய்!' -சர்ச்சைக்கு விளக்கமளித்த வாணியம்பாடி தி.மு.க புள்ளி

செல்லுலார் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான ஆய்வு மையத்தின் இயக்குநரும், வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆசிரியருமான ராஜேஷ் மிஸ்ரா, ``தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டின் வைரஸ் மாதிரிகள் கிளாட் A3i மாதிரியை ஒத்துள்ளன. ஆய்வில் பயன்படுத்திய பெரும்பாலான மாதிரிகள் இந்தியாவில் வைரஸ் வெடிப்புத் தொடங்கிய நாள்களிலிருந்து கேகரிக்கப்பட்டவை. டெல்லியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மாதிரிகளில் A3i மாதிரியோடு சிறிது ஒற்றுமை தென்பட்டாலும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஒத்துப்போகவில்லை.

corona virus
corona virus

அதனால், இந்த வைரஸின் பண்புகள் உலகின் வேறு எந்த நாடுகளோடும் ஒத்துப்போகவில்லை என்பதால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த வைரஸ் தோன்றியிருக்கலாம். தற்போது கண்டறியப்பட்டுள்ள கிளாட் A3i இந்தியாவில் மட்டுமே இருப்பதை ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. மேலும், வரும் நாள்களில் வைரஸின் மரபணு வரிசைமுறை ஆய்வு செய்யப்பட இருப்பது வைரஸ் குறித்த தெளிவான புரிந்துணர்வை நமக்கு அளிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு