Published:Updated:

`மாஸ்டர்' பாடலுக்கு டான்ஸ்... சிகிச்சைகளுக்கிடையே ஸ்ட்ரெஸ் பஸ்டர்... கலக்கும் மருத்துவர்!

மருத்துவர் டான்ஸ்

"நியூஸ் சேனல்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். எத்தனை மன அழுத்தத்தோடு வந்தாலும் சரி, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொஞ்சநேரம் இளையராஜா மெலடி கேட்டால் போதும் எனக்கு."

`மாஸ்டர்' பாடலுக்கு டான்ஸ்... சிகிச்சைகளுக்கிடையே ஸ்ட்ரெஸ் பஸ்டர்... கலக்கும் மருத்துவர்!

"நியூஸ் சேனல்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். எத்தனை மன அழுத்தத்தோடு வந்தாலும் சரி, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொஞ்சநேரம் இளையராஜா மெலடி கேட்டால் போதும் எனக்கு."

Published:Updated:
மருத்துவர் டான்ஸ்

"துடிக்கிற ஓர் உயிரைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் மனஅழுத்தம் வேறெதிலும் இருக்காது" என்கிறார் மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால். இவர் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்தப் பிரிவில் கோவிட்-19 ஹைரிஸ்க் கேஸ்களையும் கையாளுகின்றனர்.

மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்
மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்

எனவே அதிகப்படியான ஸ்ட்ரெஸ்ஸைத் தவிர்க்க மருத்துவர் செந்தில்குமாரும், சக மருத்துவப் பணியாளர்களும் தங்கள் பணிநேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆடிப்பாடி ரிலாக்ஸ் செய்துகொள்கின்றனர். குறிப்பாக 'மாஸ்டர்' பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி இருக்கிறார்கள். இந்த ரிலாக்ஸ் டைமிற்காக சக மருத்துவ நண்பர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் செந்தில்குமார். மருத்துவர் செந்தில்குமாரிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"உயிருக்குப் போராடுவோர் மட்டுமே வருவார்கள் என்பதாலேயே எப்போதும் ஒருவிதப் பரபரப்போடுதான் எங்கள் பணி இருக்கும். வலி, நோய், மரணம், அழுகை, கதறல் எனப் பெரும்பாலும் இந்தப் பகுதியே நெகட்டிவ் வைபிரேஷன்களால் சூழ்ந்திருக்கும். இதனால் நாங்களும் மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்படுவதுண்டு.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
மாதிரிப் புகைப்படம்

வழக்கமாக வீட்டிற்குச் சென்றதும் ஐசியூவையெல்லாம் மறந்துவிட்டு ரிலாக்ஸ் செய்துகொள்வோம். ஆனால் இந்த கோவிட்-19 இன்னும் கொஞ்சம் கூடுதல் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிறது. எனவேதான் மருத்துவமனையிலேயே ஓய்வு நேரத்தில் ரிலாக்ஸ் செய்துகொள்கிறேன். வெறுமனே உட்கார்ந்திருப்பதைவிட, நடனம் மிகப்பெரிய ரிலாக்ஸேஷனாக இருக்கிறது.

ஐசியூவில் நோயாளிகளோடு போராடுவதைவிடச் சவாலானது அவர்களின் உறவினர்களை ஆசுவாசப்படுத்துவது. அழுகை, கோபம், தவிப்பு, பயம் என எல்லா உணர்வுகளின் உச்சமும் அவர்களிடம் இருக்கும். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தாமல் கவனத்துடன் கையாள வேண்டும். அவர்களைப் பேச விடவேண்டும். மனதிலிருப்பதையெல்லாம் கொட்டிவிடுவார்கள். பிறகு அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

கொரோனா
கொரோனா

செவிலியர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் இது ரொம்பவும் மனச்சோர்வைத் தரலாம். அதனாலேயே அவர்களையும் என்னோடு நடனம் ஆடவைக்கிறேன். இதனால் அவர்கள் களைப்பையும் ஸ்ட்ரெஸ்ஸையும் போக்கிக்கொள்ள முடிகிறது. எனது வழக்கமான ஸ்ட்ரெஸ் பஸ்டரை என் சக பணியாளர் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது கூடுதல் ரிலீஃப் கிடைக்கிறது.

கோவிட் - 19 விஷயத்தில் நிர்வாகத் தரப்பிலிருந்து நிறைய அழுத்தங்கள் வரும். எங்கள் மருத்துவமனையில் தொடக்கத்திலிருந்தே கோவிட்-19க்கு சிகிச்சையளித்து வருவதால் வார்டுகளைப் பராமரிப்பது தொடங்கி வேலை தொடர்பான ஸ்ட்ரெஸ் மிக அதிகமாக இருக்கும். ஆள் பற்றாக்குறை ஏற்படும்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பணியாற்ற விரும்பினாலும் அவர்களின் வீட்டார் பலரும் மறுப்பார்கள். ஊழியர்களுக்கும்கூட ஒருவித பயம் இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டித்தான் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. மொத்தத்தில் இந்தக் கொரோனா காலம் என்னைப்போன்ற மருத்துவர்கள் அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் மிகுந்த காலம்.

நியூஸ் சேனல்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். எத்தனை மன அழுத்தத்தோடு வந்தாலும் சரி, வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொஞ்சநேரம் இளையராஜா மெலடி கேட்டால் போதும் எனக்கு. நான் சினிமா பார்த்ததேயில்லை. ஆனால், சமீபத்தில் மட்டும் 60 படங்கள் புதிதாகப் பார்த்திருக்கிறேன். இந்தக் கொரோனா காலம் எனக்குள் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது.

மனைவியுடன் மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்
மனைவியுடன் மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்

ஊரடங்கு, எது அத்தியாவசியமானது எது ஆடம்பரமானது என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துக் காட்டியிருப்பதாக உணர்கிறேன். மனைவி, மகன், மகள் என யாரோடும் நெருங்குவதில்லை. அம்மா அப்பாவோடு நேரம் செலவழிக்க முடியாதிருப்பதைப் பெரும் இழப்பாகக் கருதுகிறேன். வேலைப்பளுவால் அவர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை.

கோவிட்-19 தொற்றுக்குப் பயந்து மருத்துவமனைக்குச் செல்லாமலே இருந்ததால் இரண்டு நாள்களுக்கு முன்பு அம்மாவுக்கும் உடல்நிலை சீரியஸ். தற்போதுதான் குணமாகி நலமாக உள்ளார். இப்படி மக்கள் பலருமே தொற்றுக்குப் பயந்து மருத்துவமனை செல்லாமல் இருக்கிறார்கள். இதனால், சுலபமாகக் கண்டறிந்து குணமாக்க முடிகிற உடல்நலக்கோளாறுகூடப் பெரும் சிக்கலில் முடிகிற வாய்ப்புகள் அதிகம்.

குடும்பத்துடன் மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்
குடும்பத்துடன் மருத்துவர் செந்தில்குமார் ராஜகோபால்

மெடிக்கலில் எல்லோரும் வந்து உடல் பிரச்னையைச் சொல்லி மருந்துகள் வாங்கிச் சென்றதைப் பார்த்து, 'மருந்து கேட்டு வருபவர்களை டாக்டரிடம் அனுப்பலாமே...' என மெடிக்கல் ஊழியரிடம் நண்பர் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஊழியர், 'சொன்னால் திட்டுகிறார்கள் சார். அதனால்தான் மருந்துகள் கொடுத்து விடுகிறோம்' என்றாராம். ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.

மக்களுக்காக நாங்கள் இவ்வளவு போராடுகிறோம். அவர்கள் தங்கள் உடல்நலனில் ஆரம்பத்திலேயே அக்கறை செலுத்தி டாக்டரை அணுகினால் பெரிய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம். கொரோனா மட்டுமல்ல மற்ற உடல் பிரச்னைகளும் கவனிக்கப்பட வேண்டிவைதான். மக்களும் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

Medicine
Medicine
Representational Image

சுய மருத்துவம் தற்போதைக்கு நிவாரணியாக அமைந்தாலும் நிரந்தரத் தீர்வாகாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக அவசர சிகிச்சைப் பிரிவுப் பணியில் இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகளுக்கும் இந்த உயிர்காக்கும் சேவையில் எனது முழுமையான பங்களிப்பை ஆற்றுவேன்" என்றார்.