Published:Updated:

கொரோனா பாதித்தவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி தேவையில்லையா? - ICMR ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்களுக்கு ig G அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வராமல் தடுப்பதற்கும், அப்படியே கோவிட் தாக்கினாலும் உயிரிழப்பு வரை செல்லாமல் தடுப்பதற்கும் தடுப்பூசிதான் மனிதர்களைக் காக்கும் கேடயம். ஆனால், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஒருமுறை கொரோனா வந்தவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறது ஐசிஎம்ஆரின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Steven Senne
கோவிட் 19: `6 முதல் 8 வாரங்களில் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும்!' - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை

ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, அதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்பட்டு விடுகிறது. அதனால், அவர்களுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியே போதுமானது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகம் இருக்கிறது. இந்த நேரத்தில் இரண்டாது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது, அந்தப் பிரச்னையை மேலும் சமாளிக்க உதவும் என்கிறது அந்த ஆய்வு.

18 முதல் 75 வயது வரையிலான ஆண், பெண் என 121 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அவர்கள் அனைவருக்கும் ஆன்டிபாடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிட உதவும் ig G பரிசோதனையைத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 25 முதல் 35 நாள்களில், இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 25- 35 நாள்களில் என மூன்று விதங்களில் அளவிட்டிருக்கிறார்கள். இதில் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்களுக்கு ig G அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Corona
Corona
AP Illustration/Peter Hamlin
மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

அதாவது, முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டவர்களின் உடலில் ஏற்பட்டிருக்கிற ஆன்டிபாடியைவிட இரண்டாவது டோஸ் தடுப்பூசி அதிகம் ஆன்டிபாடியை ஏற்படுத்தவில்லை என்கிறது அந்த ஆய்வின் முடிவு. தவிர, கொரோனாவால் லேசாகவோ, மிதமாகவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தவணை கோவிஷீல்டு எடுத்துக்கொண்டாலே போதும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு