Published:Updated:

கொரோனாவால் பாதிக்கப்படும் வாசனை, ருசி அறியும் திறன்... மீட்டெடுக்க முடியுமா?

கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் வாசனை இழப்பு

மூக்கின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நரம்பில் சென்று கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்வதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படும் வாசனை, ருசி அறியும் திறன்... மீட்டெடுக்க முடியுமா?

மூக்கின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நரம்பில் சென்று கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்வதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

Published:Updated:
கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் வாசனை இழப்பு

கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுபவர்களில் 85 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் அறிகுறிகளற்றவர்களே. வெறும் 15 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஏதேனும் அறிகுறிகள் தென்படும். அறிகுறிகளும் நபர்களுக்கு நபர் வேறுபடலாம். அண்மையில் கோவிட்-19 அறிகுறிகளாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது வாசனை மற்றும் ருசி தெரியாமல் போவது.

loss of smell
loss of smell

வாசனையை உணர முடியாமல் போவதை அனோஸ்மியா (Anosmia) என்று மருத்துவச் சொற்களில் அழைக்கின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் அனோஸ்மியாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில நாள்களில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர். ஆனால், அவர்களில் சிலருக்கு அது நிரந்தர பிரச்னையாகவும் மாற வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசனையை உணர முடியாமல் போவது நிரந்தர பிரச்னையாக மாறுமா என்று தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியனிடம் கேட்டோம்.

"கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பானவர்களிடம் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறோம். கோவிட்-19 மட்டுமல்ல, சாதாரண சளி, மூக்கடைப்பு ஏற்பட்டாலும் இந்தப் பிரச்னை ஏற்படும். அதனால் அனோஸ்மியா ஏற்பட்டால் அது கோவிட்-19 ஆக மட்டும்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது.

கொரோனா வைரஸ் மூக்கினுள்ளிருக்கும் நரம்பில் சென்று ஒட்டிக்கொள்கிறது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டி.ஆர்.நாகேஸ்வரன்

சில கோவிட்-19 நோயாளிகளுக்கு வாசனையை உணர முடியாமல் போகும் அறிகுறி மட்டுமே ஏற்படுகிறது. வேறு எந்த அறிகுறிகளும் தோன்றுவதில்லை. அதனால் இந்தச் சமயத்தில் வாசனையை உணர முடியாமல் போனால் அது கோவிட்-19 ஆக இருக்குமோ என்று சந்தேகித்து, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிரூபிக்கப்படவில்லை...

மூக்கின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள நரம்பில் சென்று கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்வதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நாள்களில் பிரச்னை சரியாகிவிடுகிறது என்றாலும், சிலருக்கு நாள்பட்ட பிரச்னையாகவோ, நிரந்தர பிரச்னையாகவோ மாறலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது சரியான ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

Dr.Subramanian
Dr.Subramanian

மூக்கினுள்ளிருக்கும் ஆல்ஃபேக்டரி (Olfactory) என்ற நரம்புதான் அனோஸ்மியாவால் பாதிக்கப்படுகிறது. இந்த நரம்பு பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கும் மிகவும் அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. இரையைத் தேடுவதற்கும் ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் வாசனையை உணர்ந்து அறிய இந்த நரம்பு பயன்படும். மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளுக்கு இந்த நரம்பு கூடுதல் பயன்களை அளிக்கும்.

மீட்டெடுக்க முடியாது!

ஒருவேளை இந்த நரம்பு தீவிரமாகப் பாதிக்கப்பட்டுவிட்டால் அதைச் சரிசெய்து மீட்டெடுக்க முடியாது. அது நிரந்தர பிரச்னையாக மாறும். வாசனையை உணர முடியாமல் போனால் ருசியையும் உணர முடியாமல் போகும். பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அதனால் எப்படிப் பேசவும் முடியாதோ, அதே போன்றுதான் இந்த விஷயத்திலும் நடக்கும்.

loss of smell
loss of smell

மனிதர்களுடைய உடலமைப்பின்படி மூக்கில் உணரும் வாசனைதான் பல சுவைகளை மூளைக்கு உணர்த்தும். அந்த நரம்பின் இயக்கம் தடைப்படும் பட்சத்தில் சாப்பிடும் உணவின் ருசியை அறிய முடியாமல் போகும்.

இதில் சிக்கல் என்னவென்றால் கோவிட்-19 பாதிப்பால் ஆல்ஃபேக்டரி நரம்பு நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டுவிட்டதா என்பதையும் நம்மால் கண்டறிய முடியாது. அதை நிரூபிக்கவும் முடியாது. நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது ஆய்வுகளின் மூலம் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும். அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

அனோஸ்மியா பிரச்னை குறித்து காது - மூக்கு - தொண்டை மருத்துவர் டி.ஆர்.நாகேஸ்வரனிடம் கேட்டோம்.

"ஆல்ஃபேக்டரி நரம்பு மூக்கின் உட்பகுதியிலிருந்து தொடங்கி மூளைவரை செல்லும். கொரோனா வைரஸானது பெரும்பாலும் மூக்கின் வழியாகத்தான் உள்ளே செல்கிறது என்பதால் ஆல்ஃபேக்டரி நரம்பில் சென்று ஒட்டிக்கொள்கிறது.

ENT Dr.D.R.Nageswaran
ENT Dr.D.R.Nageswaran

வைரஸ் நரம்பைத் தாக்குவதால்தான் வாசனையை உணர முடியாமல் அனோஸ்மியா பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இது தற்காலிகப் பிரச்னையாகத்தான் இருக்கிறது என்றாலும் இந்தப் பிரச்னை பற்றி கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசத்தைச் சரியாக அணியாததால்தான் கொரோனா வைரஸ் எளிதாக மூக்கினுள் நுழைந்துவிடுகிறது" என்றார் அவர்.

கோவிட்-19 நோய் பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதைக் காண்கிறோம். நம்முடைய சிறு அலட்சியம்கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் அதிக கவனத்துடன் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism