Published:Updated:

`கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; தினசரி அப்டேட் இனி இருக்காது' - கேரள அரசு

Corona Virus - Representational Image ( Pixabay )

கேரள மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி, 223 நோய்த் தொற்றுகளும் 5 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை கேரளாவின் ஒட்டுமொத்த கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 65.35 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 68,365 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

`கேரளாவில் கோவிட் நோய்த்தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவரும் நிலையில், இனிமேல் தினசரி கோவிட் 19 தொற்று எண்ணிக்கை குறித்த அப்டேட்  வழங்கப்படாது' என்று கேரள அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றின் தீவிரம் மற்றும் அதன் பரவலைக் கண்டறியும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து மீண்டவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையையும் ஒவ்வொரு மாநில அரசும் தினசரி வெளியிட்டு வந்தது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், இனிமேல் தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை குறித்த தினசரி அப்டேட்  வழங்கப்படாது என ஏப்ரல் 11 ஆம் தேதி அறிவித்தது, கேரள அரசு. 

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ஏப்ரல் 7 ஆம் தேதி, கேரள அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், `கேரளாவில் நடைமுறையில் உள்ள மாநில அரசின் அனைத்து கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், `இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்படும், கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல் மற்றும் கை சுகாதாரம் பேணுதல் போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி, 223 நோய்த் தொற்றுகளும் 5 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை கேரளாவின் ஒட்டுமொத்த கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 65.35 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 68,365 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism