Published:Updated:

ஒமிக்ரான் அலை; அலர்ட் ஆக வேண்டிய நேரம் வந்தாச்சு!

samples collected for COVID-19
News
samples collected for COVID-19 ( Channi Anand | AP Photo )

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்த அலையின் அறிகுறிகள் இந்தியாவிலும் நேற்று தென்படத் தொடங்கியிருக்கிறது.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

ஒமிக்ரான் வேரியன்ட் முதன்முதலில் கண்டறியப்பட்டு, ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஒமிக்ரான் பற்றி நமக்கு தெரிந்தவற்றில், மிக முக்கியமானவை இரண்டு.

 1. அதன் அதிவேகப் பரவும் திறன்.

 2. இரண்டு டோஸ் தடுப்பூசிகளால் அல்லது முந்தைய கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட எதிர்ப்புசக்தியைத் தாண்டியும், தொற்று ஏற்படுத்தும் திறன்.

இந்த இரண்டுமே மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால்தான், உலக நாடுகளை உடனே அலர்ட்டாகச் சொன்னது WHO. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்த அலையின் அறிகுறிகள் இந்தியாவிலும் நேற்று தென்படத் தொடங்கியிருக்கிறது. எனவே, மூன்றாம் அலைக்கான நாள்கள் வெகு தொலைவில் இல்லை!

என்ன நடக்கிறது உலகில்?

 • டிசம்பர் 20 முதல் 26-ம் தேதி வரையிலும் உலகில் 49.9 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய வாரத்தைவிடவும் 11% அதிகம். இதில் அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 39% வரை பாதிப்புகள் உயர்ந்துள்ளன.

 • இதேபோல, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது கொரோனா. அதாவது, உலகம் முழுக்க மீண்டும் ஒரு அலை தொடங்கியிருக்கிறது.

``டெல்டா, ஒமிக்ரான் ஆகிய இரு வேரியன்ட்களுமே இணைந்து பரவுவதால், உலகம் முழுவதும் கொரோனா உச்சத்தைத் தொட்டு, சுனாமி போல பெரிய அளவில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்” என இதுகுறித்து எச்சரித்திருக்கிறார் WHO-வின் இயக்குநர் டெட்ரோஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Coronavirus
Coronavirus
AP Illustration

இந்தியாவின் நிலை என்ன?

 • இந்தியாவிலும் நேற்று கொரோனாவுக்கு ஏறுமுகம்தான். நேற்றைய காலை நிலவரப்படி, இந்தியாவில் 9,195 தொற்றுகள் உறுதியாகியிருந்தன. இது கடந்த 3 வாரங்களில் அதிகம்.

 • முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த 7 நாள்களில் 77% அதிக தொற்றுகள் உறுதியாகியிருக்கின்றன.

 • ஒமிக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஜீனோம் பகுப்பாய்வு செய்யப்படும் மாதிரிகளில் சுமார் 60% ஒமிக்ரான் மாதிரிகளாகவே இருக்கின்றன. எனவே விரைவில், இந்தியாவிலும் டெல்டா வேரியன்ட் ஆதிக்கத்தை, ஒமிக்ரான் விஞ்சிவிடும்.

 • நாட்டின் முக்கிய நகரங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

  • மும்பையில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகள் - 2,510. இது முந்தைய தினத்தைவிட 80% அதிகம். முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டால் 400% அதிகம்.

  • டெல்லியில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகள் - 923. முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டால், 600% அதிகம்.

  • பெங்களூருவில் 400; முந்தைய வாரத்தைவிட 80% அதிகம்.

  • சென்னையில் 294; முந்தைய வாரத்தைவிட 100% அதிகம்.

 • இப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், இன்னும் சில நாள்களில் (அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள்) தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் எகிறும் எனக் கணித்திருக்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்தப் புதிய அலை, இரண்டாம் அலை போல நீண்ட நாள்களுக்கு நீடிக்காமல், விரைவில் முடிந்துவிடும் எனவும் கணித்திருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழகத்தின் நிலை என்ன?

தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 739. (நேற்று முன்தினம் - 619); உயிரிழப்புகள்: 8 (நேற்று முன்தினம் - 06)

 • தமிழகத்தில் பதிவான ஒமிக்ரான் பாதிப்புகள் - 45 (நேற்று ஒருநாளில் மட்டும் 11)

 • இப்போதைக்கு பிற மாநிலங்களைப் போல பெரியளவில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், கடற்கரைகளில் அன்று மக்கள் கூடுவதற்கும் மட்டும் இதுவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன ஆகும்?

தொற்றுப்பரவல் விகிதமும் இந்தியாவில் உயர்ந்து வருவதால், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இனி தொடர்ந்து உயரவே வாய்ப்பு அதிகம்.

 • இவ்வளவு நாள்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி அளித்த தைரியத்தில் இருந்திருப்போம். ஆனால், ஒமிக்ரான் அதற்கும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால், 2 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே போதாது. பூஸ்டர் டோஸ்கள் எடுத்துக்கொள்ளும் வரையிலும், மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, அலர்ட்டாக இருப்பதே, இந்த ஒமிக்ரான் அலையைக் கடக்க நம் முன் இருக்கும் ஒரே வழி!

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!