Published:Updated:

`ராத்திரி 7 மணிக்குமேல் அழுதா வெயிட் குறையுமாம்!'- `ஏஷியா ஒன்’ ஆய்வு சொல்வதென்ன?

இனி, தியேட்டரில் படம் பார்க்கும்போது அழுகாச்சி காட்சிகள் வந்து உங்களை ஃபீல் பண்ண வைத்துவிட்டால், யோசிக்காமல் அழுதுவிடுங்கள்!

கண்ணீர்
கண்ணீர்

நான் ரொம்ப எமோஷனல்... சின்ன விஷயத்தைக்கூட தாங்கிக்க முடியாது... கண்ணுல தண்ணியா கொட்டிரும்' என்று தன்னிலை விளக்கம் கொடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. நீங்கள் உணர்வுபூர்வமான நபராக இருந்து, அடிக்கடி கண்ணீர் சிந்துபவர் என்றால் உங்களை மகிழ்விக்க ஓர் ஆய்வு வெளியாகியிருக்கிறது. அழுது கண்ணீர் சிந்தினால் உடல் எடை குறையும் என்பதுதான் அந்த ஆய்வு முடிவு.

crying
crying

ஏஷியா ஒன் ஆராய்ச்சி இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், மனஅழுத்தம் ஏற்பட்டு உணர்வுபூர்வமாக ஒருவர் அழும்போது கண்களிலிருந்து வெளியேறும் கண்ணீருக்கு உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாம் அழுதுகொண்டிருக்கும்போது உடலால் அதிகமான கொழுப்பைச் சேர்த்து வைக்க முடியாதாம். மேலும், மனஅழுத்தத்துக்கான ஹார்மோன்கள், உடலிலுள்ள நச்சுகள் கண்ணீரில் வெளியேற்றப்படும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து எடை அதிகரிக்காது.

weight loss
weight loss
Vikatan

மேலும், இரவு 7 மணி முதல் 10 மணியளவில் அழும்போது உடலில் கார்ட்டிசால் ஹார்மோன் அதிகளவில் சுரந்து நச்சுகளை வெளியேற்றுவதோடு, உடல் எடையைக் குறைப்பதற்கும் வாய்ப்புள்ளது. அப்படியென்றால், `அலாரம் வைத்து இரவு 7 மணிக்கு அழுதால் வெயிட் குறைஞ்சிருமா?' என்று கேட்பவர்களுக்கு பதில் `நிச்சயம் குறையாது!' என்பதுதான்.

காரணம், கண்ணீர் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. கண்களில் ஈரப்பதத்தை நிர்வகிக்கும் கண்ணீர், இது கண்களிலேயே தேங்கியிருக்கும். அடுத்தது வெளிப்புற சுற்றுச்சூழல் காரணிகளான புகை, காற்று, தூசு ஆகியவற்றின் மூலம் கண்கள் கரித்து வரும் கண்ணீர். மூன்றாவதுதான் உணர்வுபூர்வமாக கலங்கி அழும்போது வரும் கண்ணீர்.

crocodile tears
crocodile tears

இதில் மூன்றாவது வகையான கண்ணீரைச் சிந்துகிறவர்களுக்குத்தான் எடை குறையும் விளைவு ஏற்படும். இனி, தியேட்டரில் படம் பார்க்கும்போது அழுகாச்சி காட்சிகள் வந்து உங்களை ஃபீல் பண்ண வைத்துவிட்டால், யோசிக்காமல் அழுதுவிடுங்கள்!

ஆனால், அலாரம் வைத்து அழுதாலோ முதலைக் கண்ணீர் வடித்தாலோ, நிச்சயம் நோ ரிசல்ட் தான்!