Published:Updated:

Doctor Vikatan: மாலையில் போகும் வாசனை உணரும் திறன், காலையில் திரும்புகிறது; என்ன பிரச்னை?

Sneeze ( Image by Joseph Mucira from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: மாலையில் போகும் வாசனை உணரும் திறன், காலையில் திரும்புகிறது; என்ன பிரச்னை?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Sneeze ( Image by Joseph Mucira from Pixabay )

Doctor Vikatan: எனக்கு லேசாக சளி பிடித்திருக்கிறது. கடந்த சில நாள்களாக மாலை 6 மணிக்கு மேல் மூக்கில் வாசனை உணரும் தன்மை காணாமல் போய்விடுகிறது. காலையில் 10 மணி வாக்கில் மீண்டும் வந்துவிடுகிறது. இது என்ன மாதிரியான பிரச்னையாக இருக்கும்?

பூங்குழலி
பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``வாசனை உணரும் தன்மை இல்லாமல் போவது கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அது வேறுசில வைரஸ் தொற்றின் காரணமாகவும் ஏற்படலாம். கொரோனா தொற்றின் காரணமாக இழக்கப்படும் இந்த உணர்வு, குறிப்பிட்ட சில நாள்களுக்கு நீடிக்கும். ஒரு வாரம் முதல் 8 வாரங்கள்வரை கூட அது நீடிப்பது உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் விஷயத்தில் மாலையில் வாசனை அறியும் தன்மை போவதாகவும், மீண்டும் காலையில் அந்த உணர்வு திரும்பிவிடுவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு இரவு நேரத்தில் மூக்கடைப்பு அதிகமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

முதல் வேலையாக நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். கொரோனா இல்லை என்பது உறுதியானால், அடுத்தகட்டமாகக் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism