Published:Updated:

`டெல்லி மருத்துவருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு!' - கலங்கவைக்கும் பின்னணி

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை 649 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 13 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 649 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 13 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்க மருத்துவர்கள் பலரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு டயட் மெனு என்ன தெரியுமா? நம்பமாட்டீங்க!
கொரோனா
கொரோனா
Freepik

இந்த நிலையில், டெல்லி மஜ்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் அவரின் மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள செய்தி மக்கள் பலருக்கும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண காய்ச்சல், சளிக்கு கூட மருத்துவமனைக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மஜ்பூரில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அரசின் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவருக்கு கடந்த வாரம் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவருக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாகப் பரவியதா... சிகிச்சை பெற்றவர்கள் மூலமாகப் பரவியதா என அவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளும் தீவிரமடைந்தன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதையடுத்து, மருத்துவருக்கு கொரோனா தொற்று சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா வந்த 38 வயதுப் பெண்ணிடம் இருந்து பரவியது கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் 12 -ம் தேதி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்த மூன்று நாளில் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் அடுத்த ஐந்து நாளில் கொரோனா தொற்று உறுதியானது.

இதன்பின் அந்தப்பெண்ணின் நெருங்கிய உறவினர்கள், காரில் அழைத்து வந்த டிரைவர், மருத்துவரின் குடும்பம் என 72 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், மார்ச் 12 முதல் 18 வரை அந்தக் குறிப்பிட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைத்து மக்களும் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மற்ற மருத்துவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பரிசோதனையில் மருத்துவரின் மகளுக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

கூட்டமாக நிற்கும் மக்கள்
கூட்டமாக நிற்கும் மக்கள்

தற்போது டெல்லியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சி.ஏ.ஏ போராட்டத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய மஜ்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மீண்டும் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு